சுன்னத் சுன்னத் என்ற சொல்லுக்கு வழிமுறை, வழக்கம் எனும் பொருற்படும். ஷரீஅத்தின் வழக்கில் சொல், செயல், அங்கீகாரம், ஆகியன நபி ﷺ அவர்கள்...
சுன்னத்
சுன்னத் என்ற சொல்லுக்கு வழிமுறை, வழக்கம் எனும் பொருற்படும். ஷரீஅத்தின் வழக்கில் சொல், செயல், அங்கீகாரம், ஆகியன நபி ﷺ அவர்கள் மற்றும் அவர்களின் சஹாபா பெருமக்கள் உடைய நடைமுறைகளை அது குறிக்கும். இதையே நபி ﷺ அவர்கள் கூறினார்கள் " என்னுடைய சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் சுன்னத்தையும் ஏற்று நடந்து கொள்ளுங்கள்! அவர்களின் சுன்னத்துக்கள் வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.!"
( நூல்:- அபூதாவூத் 4607, திர்மிதி 2676, இப்னுமாஜா 42, அஹ்மத் 4:26)
மேலும் அண்ணல் பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள்:- " என்னுடைய மற்றும் என் சஹாபாப் பெருமக்களுடைய வழிமுறையைக் கைக் கொண்டவர்களே சுவனவாசிகள்."
(தபரானீ 410, தைலமீ ஃபிஸ்ஸவாயித் 11293, திர்மதீ 2641)
சஹாபாப் பெருமக்கள் அவர்களின் வழி நடந்தவர் அனைவரும் சுவனவாசிகள் தான் என்று அல்லாஹ் அறிவிக்கிறான். 'முஹாஜிர்'களிலும் 'அன்சார்'களிலும் (ஈமான் கொள்வதில்) முதன் முதலாக முந்திக் கொண்டவர்களையும் அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின்பற்றினார்களே அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அன்றியும் அவர்களுக்காக சுவனச் சோலைகளை தயார் செய்தும் வைத்துள்ளான். (அல்குர்ஆன் 09:100)
ஸஹாபாப் பெருமக்கள் ஈமான் கொண்டதைப் போன்றே முனாஃபிக்குகளும் ஈமான் கொள்ள வேண்டுமென ஏவப்பட்டார்கள். (அல்குர்ஆன் 02:13)
எனினும் நபி ﷺ அவர்களைப் போன்று ஈமான் கொள்வது சாத்தியமற்றதாகும். ஏனெனில் நபி ﷺ அவர்கள் விழித்த நிலையில் மிஃராஜின் போது அல்லாஹ்வை நேரில் கண்டவர்கள். எனவே சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகள் யாவும் நன்மையானதும், சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் நேர் வழிகளாகும்.
பித்அத்
பித்அத் என்பது சுன்னதின் எதிர்ச்சொல் ஆகும். ஷரீஅத்தின் முன் நிகழ்வு எதையும் சாராமல் தன்னிச்சையான சொல், செயல் யாவும் பித்அத் ஆகும். இதையே வழிகெட்ட 'பித்அத்' என்று கூறுகிறோம். இதனைப் பற்றித் தான் அருமை நாயகம் ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள். "பித்அத் யாவும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்திற்குரிவையாகும்."
(நூல்:- திர்மிதீ 2676, அபூதாவூத் 4607, இப்னுமாஜா 43, தாரமீ 75, அஹ்மத் 4:126, இப்னு ஆஸிம் 27, ஹைதமீ 61541, தஹாவீ ஃபீ முஷ்கில் ஆஃதார் 2169)
ஒரு பித்அத் ஷரீஅத்தின் முன் நிகழ்வுகளில் எதையாவது சார்ந்து இருந்தால் அது "பித்அத்து ஹஸனா" - நல்ல பித்அத் என்று அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல நேரடியான சுன்னத்தினைச் செய்வதற்கு மட்டும் நற்கூலி உண்டு. ஆனால் பித்அத்து ஹஸநாவைச் செய்தவர், அதனைச் சொல்லித் தந்தவர், மற்றும் நடைமுறைப்படுத்தியவர் ஆகிய மூவருக்கும் அதன் நன்மைகள் குறைவின்றிக் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு இங்கே சிந்திக்கத் தக்கதாகும்.
"பித்அத் ஹஸனா" விற்குறிய ஐந்து ஆதாரங்கள்:
தொகுப்பு:- ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம் என்ற நூலின் ஆசிரியருமான மர்ஹும் ஆ.மு.இ ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாக்கவீ (ஹழரத்) அவர்களின் சுன்னத் - பித்அத் ஆதாரக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
COMMENTS