நபி முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ( لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر) (அறிவித்தவர்: இமாம்...
நபி முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
( لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر)
(அறிவித்தவர்: இமாம் அஹ்மத்)
எந்த முஸ்லிமின் உள்ளத்தில் கடுகளவேனும் பெருமையுள்ளதோ அவர் சுவனம் நுழையமாட்டார். (அறிவித்தவர்: இமாம் அஹ்மத்)
பெருமையையும் , பெருமைக்காரர்களையும் இஸ்லாம் இகழ்ந்துள்ளது. எவனொருவன் பிறரை இழிவாகக் கருதி பிறரைப் பார்க்கிலும் தன்னை உயர்வாக கருதிகிறானோ அவனே பெருமைக்காரனாவான். ஒருவர் சத்தியத்தை கூறும் போது அவர் சிறியவராக இருப்பதனாலோ அல்லது ஏழையாக இருப்பதனாலோ அல்லது அவர் பலவீனமானவராக இருப்பதனாலோ அவர் பேசுவது உண்மை என்று தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவரும் பெருமையடிப்பவராவார்.
அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
( الكبر بطر الحق وغمط الناس )
رواه مسلم رحمة الله عليه
விளக்கம்:- "பெருமை என்பது: உண்மையை ஏற்காதிருப்பதும், பிறரை விட தன்னை உயர்த்திப் பார்ப்பதுமாகும்."
(அறிவித்தவர்: இமாம் முஸ்லிம் றஹிமஹுழ்ழாஹ்)
"பதருல் ஹக்" என்பதன் கருத்து: உண்மையாளரின் உண்மையை ஏற்க மறுப்பதாகும்.
"கம்துன்னாஸ்" என்பதன் கருத்து: பிற மனிதர்களை இழிவாகக் கருதுவதாகும் .
பெருமை ஒரு இழிவான பண்பாகும். அது இகழப்பட்ட ஒரு குணமாகும். எனவே ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களுடன் மென்மையாகவும் தாழ்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். மேலும், பிறரை மலர்ந்த முகத்துடன் சந்திக்க வேண்டும்.