ஆணோ, பெண்னோ அவர்கள் மரணித்த பின் மூன்று நாட்கள் கழித்து அவர்களை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அந்த மனிதனை பத்து மாதம் பெற்ற தாயிடம் கொண...
ஆணோ, பெண்னோ அவர்கள் மரணித்த பின் மூன்று நாட்கள் கழித்து அவர்களை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அந்த மனிதனை பத்து மாதம் பெற்ற தாயிடம் கொண்டு போய் கொடுத்தால் ஏற்றுக்கொள்வாலா?
சுபஹானல்லாஹ் இந்த உலக வாழ்க்கையின் பெறுமதியினை அளவிட என்ன முடியாத உதாரணம் அது!
மரணித்த பின் எம் உறவினர்களிடம் மூன்றாவது நாள் வந்து நின்றால் பேயென்று அளரியடித்துக் கொண்டு ஓடுவார்கள். மரணிக்கும் அந்த கனம் அது எத்தகையது தெரியுமா?
விபத்து, தூக்கத்தில் உயிர் பிரிதல், நோய் மற்றும் இன்னும் பல காரணங்கள். இவைகள் எல்லாம் மரணத்திற்கான பெயர்கள்தான். எந்த ஒரு மரணமும் சக்கராத் வேதனை இல்லாமல் இல்லை.
சக்கராத் வேதணை???
எவளோ மானம் மரியாதையாக வாழ்ந்திருப்போம். போய் ஒரு ஆணின் ஜனாசாவை குளிப்பாட்டும் நிகழ்வை பாருங்கள். உயிரிருந்தால் எம் அபத்தை நாம் தொட விடுவோமா!?. அவ்வளவு தான் எம் பலம் அல்லாஹ் மிகப்பெரியவன். உயிர் பிரிந்த அந்த ஜனாஸாவின் உடல் வேதனையுடன் காணப்பட அதணை குளிப்பாட்டுபவர்கள் பக்குவத்தை கையாள வேண்டும். ஏன் என்றால் அந்த ஜனாஸா வேதணையில் அந்தளவு கதரி அழுமாம் அல்லாஹூ அக்பர் அதனை மனிதர்களும், ஜின்களும் செவியுர மாட்டார்கள். ஏனைய அனைத்து ஜீவராசிகளும் அவ்வளரளை செவியுருக்குமாம்.
உயிர் பிரிந்த கனமே எமக்கு எம் நிலமை தெரிந்துவிடும். பாவியாக இருந்தால் அடுத்தடுத்து வரவிருக்கும் அனைத்தும் நஷ்டமே அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.
பின் ஜனாஸாவை மண்ணறைக்கு கொண்டு போகும் நிகழ்வு. அந்த ஜனாஸா கதரும் ஓசை மனிதர்களுக்கு கேட்டால் அதை அடக்கவே மாட்டார்களாம். ஆனால் புழுக்களும், சூடும் இருளும் நிறைந்த அந்த இடத்திற்கு பிரவேசிக்கதான் போகிறோம். உலகிலேயே மிகவும் பயங்கரமான இடம் அந்த மண்ணறை தான்.
பின் சில கேள்விகள் வெற்றியடைந்தால் மறுமை வரை நிம்மதியான தூக்கம். இல்லை என்றால் இரண்டு விலா எழும்புகளும் இணையும் அளவிற்கு அந்த மண்ணறை ஒரு நெருக்கு நெருக்குமாம். ரசூரலுல்லாஹ் தன் இரண்டு கை விரல்களையும் கோர்த்து காட்டினார்களாம் சுபஹானல்லாஹ். பின் பாம்புகள் சாட்டப்படும். அவை மறுமை நாள் வரை அவரை கொத்துமாம். அந்த பாம்பு ஒரு தடவை இந்த உலகில் மூச்சு விட்டால் அதன் விஷத்தால் ஒரு புற் பூண்டும் முளைக்காதாம். அந்தளவு விஷம் கொண்ட பாம்பு. பின் அனைத்து விதமான உயிரனங்களும் சாட்டப்படும். தினசரி வேதணை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் மறுமை வரை.
சகோதர, சகோதரிகளே எது உண்மை, பொய் எது? எந்த பிரிவு சரி ஷியாவா? சுன்னியா? என்று நேரத்தை கழிக்காமல் எல்லாம் கூறப்பட்டு முழுமையாக்கப்பட்ட இலகுவான மார்க்கம் இது? இதை பயன்படுத்தி கொள்வோம். சில பெண்கள் கரபாண் பூச்சியை பார்த்தாலே கதறியடிப்பார்கள் மண்ணறையை பார்த்தால்!?.......
இதை வாசிக்கக்கூடிய ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு நேரம் ஜனாஸா, ஜனாஸா என்று வாசித்துக் கொண்டு வந்தீர்கள் அது வேறு யாரும் இல்லை நீங்களும், நானும் தான்.
எந்த நிலையில் மரணிக்கின்றோமோ அந்த நிலையில் தான் அந்த ரப்பின் முன்னால் எழுப்பப்படுவோம். எங்களுடைய நிலைமை என்ன என்பதை இந்தக் கணம் நீங்கள் சிந்தியுங்கள்.
Think possitive.. அதிகமாக மரணத்தை நினையுங்கள் பாவம் குறையும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் கைவிடக்கூடியவன் அல்ல.
அவன் மிகக்கிருபையாளன் மிகப்பெரியவன்.....