இஸ்லாத்தில் பழங்களுக்குக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன முன்னுரிமைகள்.
(و فاكهة مما يتخيرون . و لحم طيرٍ مما يشتهون)
மேலும் அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்
( و أمددناهم بفاكهة و لحمٍ مما يشتهون )
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
قال رسول الله صلى الله عليه وآله وسلم :
( إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإنه بركة )
رواه الترمذي
இவ்வாறு நபி அவர்களும் பழத்தைத்தான் முற்படுத்திக் கூறியுள்ளார்கள்.
இதை வைத்துதான் ஸையிதுனா நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறுகிறார்கள். உணவு சாப்பிடுவதற்கு முன்னாள் பழங்களைச் சாப்பிடுவது ஸுன்னத்தாகும். அதுமட்டும்மில்லாமல் பரக்கத்தும் உண்டாகும். மேலும் நம் விருந்தாளிகளுக்கு உணவு கொடுக்கும் முன் பழங்களைக் கொடுப்பதும் ஸுன்னத் ஆகும் என்று தன்னுடைய புஸ்தானுல் ஆரிபீன் என்ற கிதாபில் கூறுகிறார்கள்.
ஆகவே எமது உணவில் பழங்களை முற்படுவதும், அவைகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒரு ஸுன்னத்தாகவே உள்ளது.
قال سيدنا رسول الله ﷺ :- من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
"யார் என் சுன்னத்தை உயிர்பிக்கிராரோ அவர் என்னைப் பிரியம் கொண்டு விட்டார். யார் என்னை பிரியப்படுகிராரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்" என்று நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
எனவே நாம் இந்த ஸுன்னத்தை ஹயாத்தாக்கி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத்திர்க்குரியவர்களாக ஆகுவோமாக ஆமீன்.
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்