அழ்ழாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:- "ஈமான் கொண்டோரே! அழ்ழாஹ் ஏவிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதோடு இன்னும் அவ...
அழ்ழாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:-
"ஈமான் கொண்டோரே! அழ்ழாஹ் ஏவிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதோடு இன்னும் அவன் தடுத்த அனைத்து விடயங்களையும் தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் மரணிக்கும் வரை அழ்ழாஹ் வையும் அவனது தூதரையும் முறையாக நம்பி உண்மை முஸ்லிமாக இஸ்லாத்தின் மீது நிலைத்திருங்கள்."
(அத்தியாயம்:- ஆலு இம்ரான்)
இஸ்லாம் என்பது உன்மையான மார்க்கமாகும். அதையே சீரான புத்திகளும் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அந்த மார்க்கம் எல்லா காலங்களுக்கும் தோதுவானதாகும்.
மேலும் இது ஆரம்பத் தூதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடக்கம் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலான அனைத்து நபிமார்களினதும் மார்க்கமாகும்.
அழ்ழாஹ் நபிமார்களை அவன் கடமையாக்கிய விடயங்களை ஏற்று நடப்பதற்கும், ஹறாமான விடயங்களை தவிர்ந்து நடப்பதற்கும், மக்களை நன்நெறிப்படுத்துவதற்கும் இன்னும் இந்த புனித இஸ்லாம் மார்க்கத்தினை வாழ்நாள் முழுவதும் பற்றிப்பிடித்து மக்களை நலவின் பக்கம் நேர்வழிபடுத்தவதற்காகவும் அனுப்பியுள்ளான்.
"தக்வா" ( தக்வழ்ழாஹ்)
தக்வா என்பது:- அழ்ழாஹ் எந்த விடயங்களை கடமையாக்கியுள்ளானோ அவைகளை நிறைவேற்றுவதும், எவைகளை தடுதுள்ளானோ அவைகளை தவிர்த்து கொள்ளுவதுமாகும். எனவே எவர் இதனை செய்வாரோ அவர் தான் உன்மையான தக்வாதாரியாவார்.
அழ்ழாஹ் கடமையாக்கிய விடயங்களில் முதன்மையானது அழ்ழாஹ் வையும், அவனது தூதரையும் முறையாக அறிந்து உண்மைப்படுத்துவதாகும்.
ஆக்கம்:-
மௌலவி முஹம்மத் ரிஸ்மி (ரிஸ்வி, அஷ்அரி)