அழ்ழாஹுத்ஆலா நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளான் :- விளக்கம்:- நிச்சயமாக (நபியே) நீங்கள் ...
அழ்ழாஹுத்ஆலா நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளான் :-
விளக்கம்:- நிச்சயமாக (நபியே) நீங்கள் மகத்தான குணம் உடையவராக இருக்கின்றீர்கள்.
( அத்தியாயம்:- அல்-கலம் வசனம் : 4 )
ஆயிஷா அன்னையிடம் பெருமானாரின் நற்குணத்தைப் பற்றி கேட்கப்பட்ட போது அழ்ழாஹ்வின் தூதருடைய குணம் அனைத்தும் குர்ஆன் கூறக்கூடிய நற்பண்புகளாக இருந்தன என பதிலளித்தார்கள்.
( அறிவித்தவர்:- இமாம் அல்-புஹாரீ )
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தன் சமூகத்தாருக்கு மத்தியில் உண்மையாளர் என்றும் நம்பிக்கையாளர் என்றும் பிரசித்தி பெற்று இருக்குமளவுக்கு அழ்ழாஹ் அவர்களுக்கு நற்குணங்களை வழங்கியிருந்தான். மேலும் சகிப்புத்தன்மை, வீரம் போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மிகப் பெரும் வீரரையோ, கொடை வள்ளலையோ, திருப்தி கொள்பவரையோ நான் கண்டதே இல்லை என இப்னு உமர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
( அறிவித்தவர்: இமாம் அல்-பைஹகீ )
ஆக்கம்:-
மௌலவி ரிஸ்மி (ரிஸ்வி, அஷ்அரி)