நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் 100 வருடங்கள் வாழ்ந்த ஒருவர் மரணித்தார். (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொற்ப காலம் மட்டுமே இவ...
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் 100 வருடங்கள் வாழ்ந்த ஒருவர் மரணித்தார். (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொற்ப காலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தார்கள்.)
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த நபரின் ஜனாஸாவிற்கு கலந்து கொள்வதற்க்காக தயார் ஆனார்கள். அப்பொழுது அக்கால மக்கள் எல்லோரும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அந்த ஜனாஸாவிற்கு செல்ல வேண்டாம். அந்த நபர் ஒரு கெட்டவன், அதிகம் தவறு செய்யக்கூடியவன் எனக் கூறினார்கள். இதனைக் கேட்ட ஸையிதுனா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜனாஸாவிற்கு செல்லாமல் வீடு திரும்பினார்கள்.
ஸையிதுனா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீடு திரும்பிச் சென்ற போது அல்லாஹுத் தஆலா சொன்னான் "யா ஈஸாவே! நீங்கள் ஏன் அந்த ஜனாஸாவிற்கு செல்லவில்லை. நீங்கள் கட்டாயமாக அதில் கலந்துக்கொள்ள வேண்டும்." என்று அல்லாஹ் தஆலா சொன்னான்.
அதற்கு ஸையிதுனா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "ஒட்டு மொத்த மக்கள் எல்லோரும் அவர் ஒரு மோசமான மனிதர் என்று அல்லவா சொல்கிறார்கள். எனக்கு அவரைப் பற்றி அறிவித்துக் கொடு யா அல்லாஹ்!" என்று கேட்டார்கள்.
அந்த நபரைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கிறான். யா ஈஸாவே! அந்த நபர் தவ்ராத் இன்ஜீல் போன்ற வேதங்களை நன்றாக, அழகாக ஓதக் கூடியவர். அவர் அப்படி அந்த வேதங்களை ஓதும் பொழுது என்னுடைய ஹபீபின் பெயர் அஹ்மது என்று வரும் பொழுது அந்த பெயரின் மீதும், என்னுடை ஹபீபின் மீதும் கொண்ட அன்பினால் கண்ணியத்துடன் தன் ஹபீபின் மீது ஸலவாத்தை ஓதி தன் இரு பெருவிரல்களின் நகத்திற்கு முத்தமிட்டு அதை தன்னுடைய கண்களில் தடவிக் கொள்வார். அவரின் பாவங்கள் அனைத்தும் நன்மைகளாக மாற்றப்பட்டுள்ளது என்று அல்லாஹ் தஆலா சொன்னான்.
சுபஹானல்லாஹ்....!!!
நூறு வருடங்கள் வாழ்ந்து தனது வாழ்நாளில் பாவங்களை மாத்திரமே செய்த மனிதனுக்கு கூட தன்னுடைய ரசூல் மீது சலவாத் ஓதியதன் காரணமாக ஏற்றம் பெற்றார் இந்த மனிதர்.
எனவே நாங்களும் அதிக அதிகமாக ஸலவாத்துகள் ஓதி வல்ல நாயன் அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக் கொள்வோமாக!
இந்த ஸலவாத்தை ஒருவிடுத்தம் ஓதினால் 600000 ஓதிய நண்மை கடைக்கக்கூடிய ஸலவாத்து ஆகும்.
ﺍﻟﻠَّﻬُﻢَّصٙلِّ وٙسٙلِّمْ وٙبٙارِكْ عٙلىٰ سٙيِّدِنٙا مُحٙمّٙدٍ وّٰٙاٙلِهٖ وٙصٙحْبِهٖ عٙدٙدٙ مٙا فِيْ عِلْمِ اللهِ صٙلاٙةً دٙائِمةً بِدٙوٙامِ مُلْكِ الله
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்