தூய்மையே ஈமானின் அரைவாசியாகும். இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது. இதனடிப்படையில் இறைவனால் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்ட அவர்களுடைய உடலை...
தூய்மையே ஈமானின் அரைவாசியாகும். இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது. இதனடிப்படையில் இறைவனால் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்ட அவர்களுடைய உடலை சுத்தமாக வைத்திருப்பது அவர்களுடைய பொருப்பாகும்.
ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய உடல் உறுப்புக்களை இஸ்லாம் எவ்வாறு கூறியதோ அது போன்று சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். இதனடிப்படையில் இஸ்லாம் ஒரு மனிதனுடைய நகம் எவ்வாறு இருக்க வேண்டும், அவை எப்படிப் பராமரிக்க மற்றும், வெட்டப்பட வேண்டும் என்பதையும் சொல்லிக் காட்டியிருக்கின்றது. எனவே அவைகளை இப்பொழுது விரிவாக ஆராய்வோம்.
நகம் வெட்டும் பொழுது முதலில் வலது கையின் கலிமா விரலிலிருந்து வெட்ட ஆரம்பித்து வலது கையின் சின்ன விரல் வரைக்கும் வெட்டி அதன் பிறகு வலது கையின் பெருவிரலை வெட்ட வேண்டும்.
அதன் பிறகு இடது கையின் சின்ன விரலிலிருந்து வெட்ட ஆரம்பித்து அதன் பெருவிரல் வறை வெட்ட வேண்டும்.
அதை போன்று கால்களில் முதலில் வலது காலின் சின்ன விரலிலிருந்து வெட்ட ஆரம்பித்து இடது காலின் சின்ன விரல் வரை வெட்ட வேண்டும்.
இவ்வாறு வெட்டிவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய ஸுன்னத்தான வழிமுறை ஆகும்.
ஆதாரம்:- (கிதாபுத் துஹ்ஃபா இரண்டாம் பாகம் பக்கம் 476).
மேலும் நகம் வெட்டிய பிறகு தன் கைகளை உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு சுத்தம் செய்யாமல் உடலின் அரிக்கின்ற இடத்தில் சொரிந்தால் சொறி, படர்க்கை நோய் ஏற்ப்பட்டுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
ஆதாரம்:- (கிதாபுத்துஹ்ஃபா இரண்டாம் பாகம் பக்கம் 476)
மேலும் அவ்வாறு சுத்தம் செய்வது ஸுன்னத் ஆகும்.
ஆதாரம்:- (கிதாப் பாஜூரி 1 /128)
மேலும் வியாழன், வெள்ளி, மற்றும் திங்கள் அகிய தினங்களில் பகல் நேரத்தில் நகம் வெட்டுவது சிறந்ததாகும்.
ஆதாரம்:- (கிதாபுஜ்ஜம்மல் இரண்டாம் பாகம் பக்கம் 76)
மேலும் சில இடத்தில் ஓர் மூட நம்பிக்கை உண்டு. அதாவது இரவு நேரத்தில் நகம் வெட்டுவது நல்லதல்ல அது கெட்ட சகுனம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.
மேலும் வெட்டிய நகத்தை புதைப்பது ஸுன்னத் ஆகும்.
ஆதாரம்:- (கிதாபுன் நிஹாயா இரண்டாம் பாகம் பக்கம் 341)
மேலும் நகம் வெட்டிய பிறகு வுளு செய்வது ஸுன்னத் ஆகும்.
ஆதாரம்:- (கிதாப் புஸ்ரல் கரீம் இரண்டாம் பாகம் பக்கம் 10)
மேலும் கைகளிலோ அல்லது கால்களிலோ குறிப்பிட்ட நகங்களை மாத்திரம் வெட்டுவது அல்லது குறிப்பிட்ட நகங்களை மாத்திரம் வெட்டாமல் இருப்பது மக்ரூஃ (வெருக்கத்தக்க செயல்) ஆகும்.
அதே போன்று இரு கை நகங்கலை வெட்டி கால் நகங்களை வெட்டாமல் இருப்பதும் கூடாத செயலாகும்.
ஆதாரம்:- (துஹ்ஃபா இரண்டாம் பாகம் பக்கம் 475)
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்