அதிருஷ்டம்:- மேன்மையான அதிருஷ்டத்தை உருவாக்கிக்கொள்ள நம்பிக்கை உதவுகிறது. சிந்திக்க வேண்டிய கருத்து:- வழக்கமாக விஷயங்களை விதியி...
அதிருஷ்டம்:-
மேன்மையான அதிருஷ்டத்தை உருவாக்கிக்கொள்ள நம்பிக்கை உதவுகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:-
வழக்கமாக விஷயங்களை விதியின் வழிக்கு விட்டுவிடும் போக்கு உள்ளது. ஏதாவது தவறாக நடக்கும்போது, நாம் அதற்கு விதியை குற்றம் சாட்டுகிறோம். அதன்பிறகு, சூழ்நிலை முற்றிலுமாக நம் கட்டுப்பாட்டில் இல்லாததாக நாம் உணர்கிறோம், இது நம் சொந்த வாழ்க்கையின் பொறுப்பை நாம் எடுத்துக்கொள்வதை தடுத்து விடுகின்றது. ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கும் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கு எவ்விதத்திலும் நம்மால் பணியாற்ற முடியாமல் இருக்கிறது.
தீர்வு:-
நடந்துக்கொண்டிருக்கும் அனைத்திற்கும் விதியை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, எதிர்காலத்திற்கான நமது சொந்த அதிருஷ்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்போது, நம் சொந்த வாழ்க்கைக்கு நாம் பொறுப்பு எடுத்துக்கொள்வோம். அதன்பிறகு நமக்கு நன்மை பயக்கும், நம்முடைய வெற்றிக்கு பங்களிக்கும், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் விதத்தில் நம் ஒவ்வொரு எண்ணத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.