நலாயின் முபாரக் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முபாரக்கான கால்களை தன் முதுகில் சுமந்த இரு காலனிகளை தான் அரபியில்...
நலாயின் முபாரக் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முபாரக்கான கால்களை தன் முதுகில் சுமந்த இரு காலனிகளை தான் அரபியில் நலாயின் என்று சொல்லப்படும்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்சினா மலையில் அல்லாஹ் விடம் பேச முற்பட்ட பொழுது அல்லாஹ் அவர்களின் காலனிகளை கலட்டிவிட்டு அல்லாஹ் உள்ளே வர அனுமதி அளித்தான். ஆனால் மிஃராஜ் பயனத்தின் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் வரவேற்றான். அப்போது நபிகள் நாயகம் அவர்களின் காலனி கழற்ற முற்பட்ட பொழுது அல்லாஹ் அதை அனிந்து உள்ளே வர அனுமதி கொடுத்தான்.
சுப்ஹானல்லாஹ்!
இந்த மிஃராஜ் பயனத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சென்ற போது அல்லாஹ் வின் அற்ஷில் பட்ட இந்த முபாரக்கான காலனிகளை தான் நலாயின் என்று சொல்லப்படும்.
மேல சொன்ன விஷயங்களை ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்கள் பைத்தாக (கவிதையாக) கூறுகிறார்கள்; இதோ அரபியில்
قال سيدنا يوسف النبهاني رضي الله عنه :- على رأس هذا الكون نعل محمد ..
علت فجميع الخلق تحت ظلاله ..
لدى الطور موسي نودي اخلع واحد ..
على القرب لم يؤمر بخلع نعاله
ரஸூல் நாயகத்தின் பாதனியின் பரகத்தை பற்றி ஸையிதுனா காஸிம் ரலிஅல்லாஹூ அன்ஹு (ஸித்தீக் நாயகத்தின் பேரப் பிள்ளை) கூருகிறார் "எவர் நாயகத்தின் பாதனியின் அமைப்பை போல் ஒன்றை பரக்கத்திட்காக தன்வசம் வைத்துக்கொள்கிராரோ அவர் விரோதியன் சூழ்ச்சி, சூனியம், கண்ணூர், ஷைத்தானியத்தான சிந்தனைகளில் இருந்து பாதுகாப்பு பெருவார். மேலும் குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ள தாய்மார்கள் நாலாயின் முபாரக்கை வலது கையில் வைத்துக் கொண்டு இருந்தால் இலகுவான, பாதுகாப்பான முறையில் குழந்தை பிரக்கும் பாக்கியம் கிடைக்கும்".
ஸையிதுனா இஸ்லாம் அல் ஹிம்யர்ரியா வின் புதல்வி ஸையிதா உம்மு ஸஹீதா ரலியல்லாஹூ அன்ஹா கூறியுள்ளார். "எனக்கு ரஸூலுல்லாவின் பாதனியை முத்தமிட முடியாது போனால், குரைந்த பட்சம் அதனின் அமைப்பை நான் முத்தமிட வேண்டும். அதன் காரணமாக சுவர்க்கத்தில் ரஸூலுல்லாஹ்வின் பாதனியை முத்தமிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். மேலும் அதை எனது இதயத்துடன் அனைத்து வைத்துக் கொல்வதன் மூலம் மஹ்ஷரில் ஏற்படக்கூடிய கொடிய தாகமும் எனக்கு குரைந்து போய் விடும்".
ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்:- "கண்மனி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான நலாயினின் (காலனிகளின்) படத்தை யார் அவர்களிடம் வைத்து இருக்கிறார்களோ! அவர்களுக்கு கண்மனி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணக்கூடிய பாக்கியம் கிடைக்கும்".
மேலும் ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ ரலியல்லாஹூ அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:- "உண்மையாக எம்போதும் நான் ரஸூலுல்லாஹ்வின் பாதனியின் படத்தை என் கைவசம் வைத்துக் கொண்டு தான் உள்ளேன். அதன் காரணமாக அப்பாதனிகளின் நிலல் இவ்வுலகிலும் மருஉலகிலும் நிச்சயமாக எனக்குக் கிடைக்கும்".
இந்தியாவிலே மிக பிரபலியமான இறைநேசர்களில் ஒருவரும் மாபெரும் நபிகளாரின் நேசருமான இமாம் அஹ்மது ரஸா கான் (பரேலி, யூ.பி.) அவர்களுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்துக்கள் கிடைக்கக் காரணம் அவர்கள் எப்போதும் அவர்களின் தலைபாகையில் நலாயின் முபாரக் பொருத்தப்பட்டு இப்பதேயாகும்.
மேலும், சில உலமாக்கள் கூறுகிறார்கள்:- "கண்மனி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான நலாயின் (காலனிகளை) கையில் வைத்திருந்தால் அவருக்கும் ஏனைய மக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு உருவாகும்".
மேலும் முபாரகான நலாயினை கையில் வைத்திருந்தால் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்கக் கூடிய பாக்கியம் கிடைக்கு மென்றும், மேலும் முபாரக் நலாயினை கையில் வைத்து வசீலாவாக துஆ கேட்டால் அந்த துஆக்கு வேகமாக பதில் கிடைக்கும் என்றும் மேலும் அவர்களை காண்பதற்கு உதவியாகவும் இருக்கும் என்றும் பெரும் உலமாக்கள் கூறி இருக்கிறார்கள்.
ஸையிதுனா அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹூ அன்ஹு அவர்கலும், ஸையிதுனா அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலிஅல்லாஹூ அன்ஹு அவர்கலும் ரஸூலுல்லாஹ்வின் பாதனிகளை கண்காணிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஸையிதுனா அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூ அன்ஹு அவர்கள் அக்காலணிகளை கலட்டும் போது அவைகளை தனது கரங்களில் சுமர்ந்தவர்கலாகவும், எப்போதெல்லாம் நாயகமவர்கள் வேலியே செல்ல எழுந்து நிற்கிறாரோ அப்போதெல்லாம் அக்காலனியை ரஸூலுல்லாஹ்வின் பாதத்தில் போட்டு விடுவார்கள்.
மேலும் கூறப்படுகிறது ரஸூலுல்லா வின் பாதனியின் படத்தை எவர் தன்னிடம் வைத்துக் கொள்கிராரோ அவருக்கு அப்பாதனிகளின் நிலல் இவ்வுலகிலும் மரு உலகிலும் நிச்சயமாக கிடைக்கும்.
முபாரக் நலாயினை கையில் வைத்திருந்தால் கொடூரர்களின் தீங்குகளிருந்தும், ஷைத்தானின் சூழ்சிகளில் இருந்தும், மூழ்கடிக்கக்கூடிய கெட்ட பார்வைகளில் இருந்தும் காப்பாற்றப்படுவோம்.
மேலும் பிரசவ வலியின் போது அந்த தாய் முபாரக் நலாயினை கையில் வைத்திருந்தால் பிரசவம் இலகுவாக லேசானதாக அமையும்.
யார் ஒருவர் எப்போதும் முபாரக் நலாயினை வைத்திருந்தால் படைப்புகளுக்கும் அவருக்கும் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும்.
யார் தன்னுடய பொருள் அல்லது சொத்துகளுடன் முபாரக் நலாயினை வைக்கிறார்களோ அந்த சொத்துக்கள், பொருட்கள் பாதுகாக்கப்படும்.
யார் நல்ல நோக்கத்துடன் நல்ல விஷயத்துக்காக முபாரக் நலாயினை வைத்திருந்தால் அவர்களின் நோக்கம் நிறைவேரும்.
யார் முபாரக் நலாயினை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு திருடர்களின் மூழ்கக்கூடிய பிரச்சனைகளிடமிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
யார் முபாரக் நலாயினை வாகனத்தில் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
யார் ஒருவர் முபாரக் நலாயினை வீட்டில் வைத்திருக்கிறாறோ அவருடய வீட்டில் ரஹ்மத்துடய மலக்குமார்கள் எப்போதும் அவ்வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், ஷைத்தானின் தீங்கிளிருந்தும் அவ்வீடு பாதுகாக்கப்படும்.
நோயாள் பாதிக்கப்பட்ட ஒருவர் முபாரக் நலாயினை வைத்திரிக்கிறாரோ அவர்களுக்கும் பரிபூரண ஷிபா கிடைக்கும் என்று சூபியாக்களும் பெரும் உலமாக்களும் கூறுகிறார்கள்.
இந்த நலாயின் முபாரக்கை கன்ணியத்துடன் கையில் வைத்துக்கொண்டு இருந்தால் அல்லாஹ் நமக்கும் விலாயத்து கொடுப்பதற்க்கான வாய்ப்புகள் உள்ளது. எம்மில் பலர் இன்று இந்த முபாரக் நலாயினின் சிறப்புக்களை தெரியாமல் இருக்கிறார்கள்.
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்