உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வேண்டு மென்றாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனா பிறருடைய கஷ்டத்துக்கும் வலிக்கும் மட்டும் காரணமாகிவிடாதீர்க...
உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வேண்டு மென்றாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனா பிறருடைய கஷ்டத்துக்கும் வலிக்கும் மட்டும் காரணமாகிவிடாதீர்கள். அது உங்கள் வாழ் நாள் முழுதும் நிம்மதி இழக்க வைத்துவிடும்.
தன் மனைவியை திட்ட எல்லா உரிமைகளும் தன் கனவருக்கு உண்டு. ஆனால் சீ என்றும் தகாத வார்த்தைகள் கொண்டும், கடும் மோசமான, பாரதூரமான, காரமான பேச்சுக்கள் பேசாதீர்கள். காரணம் மனைவி என்பவள் உங்கள் விலா எலும்பின் மூலம் படைக்கப் பெற்றவள். அவளை அசிங்கப் படுத்துவதாக நினைத்து உங்களை நீங்களே அசிங்கப் படுத்திக் கொள்கிறீர்கள்.
கணவனாக இருந்தாலும் கண்ணியமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். காரணம் அனைத்து உறவுகளும் உங்களை விட்டுப் போனாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டு செல்லாத ஒரே ஒரு உறவு உங்கள் மனைவி மட்டுமே.
ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்.
எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:- உண்மையான வீரன் மல்யுத்தம் செய்பவன் அல்ல. மாறாக தனக்கு கோபம் ஏற்படும் போது தனது கோபத்தையும், உணர்ச்சியையும் அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன் என்றார்.
ஒரு பெண் "தனது அப்பாவின் பொறுப்பில் தான் இருக்கும் பொழுது எப்படி பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருந்தேனோ அதே நிலைதான் எனது கணவன் பொறுப்பிலும் நான் இருக்கிறேன்" என்று ஒரு பெண் சொல்வாள் என்றார் அவள் கணவர் தான் உண்மையான ஆண்.