இஸ்லாம் எமக்குக் கடமையாக்கப்பட்ட எல்லாக் கடமைகளிலும் பர்ளுகள், ஷர்த்துகள் என தனித்தனியாக வகைப்புத்தப் பட்டுள்ளன. எனவே இவைகளை என்ன என்ப...
ஷர்த்து என்றால் என்ன?
ஷர்த்துக்கு உதாரணமாக:-
தொழுகைக்கு வுழூ ஷர்த்தாகும். ஒரு மனிதன் தொழ வேண்டும் என்றால் அவனுக்கு வுழூ ஷர்த்துக்களில் ஒன்றாகும்.
எனவே இந்த வுழூவானது அவன் தொழுகையின் ஆரம்பத் தக்பீர் கட்டுவதில் இருந்து கடைசிச் ஸலாம் கொடுக்கும் வரைக்கும் அவன் வழூவோடு தான் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் தொழுகையின் இடையில் வுழூ முறிந்து விடுமானால் அவனுடைய தொழுகையும் பதிலாக ஆகிவிடும். இதுவே ஷர்த்தாகும்.
பர்ளு என்றால் என்ன?
பர்ளுக்கு உதாரணமாக:-
தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது பர்ளாகும். ஒரு மனிதன் தொழ வேண்டும் என்றால் அவன் தக்பீருக்குப் பின்னால் பாத்தியா சூரா கட்டாயமாக ஓத வேண்டும்.
எனவே ஒரு மனிதன் தொழுகையில் தக்பீருக்குப் பின்னால் சூரா ஃபாத்திஹாவை ஓதுவான். பின்பு அவன் அடுத்தடுத்துள்ள பர்ளுகளையும், சுன்னத்களையும் செய்து கொண்டு போவான். மாறாக அவன் தனது தொழுகை முழுவதிலும் ஃபாத்திஹா சூராவை ஓதிக் கொண்டே இருக்க மாட்டான். தக்பீருக்குப் பின்னால் மாத்திரமே அவன் சூரா பாத்திஹாவை ஓதுவான்.
இதுவே பர்ளாகும்.
ஷர்த்துக்கும், பர்ளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஆக்கம்:-
மொளவி முபஷ்ஷிர் (ரஸா, காதிரி)