சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலைமையில் இதுவரைக்கும் நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்...
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலைமையில் இதுவரைக்கும் நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் உலகில் பல நாடுகளுக்கும் இக் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸினால் சீனாவில் மாத்திரம் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்த், அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, ஜெர்மன் ஆகிய நாடுகளில் இந்தக் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனா மற்றும் உலக நாடுகளில் எல்லாம் எங்கெல்லாம் இந்த வைரஸ் இருக்கின்றது என்பதை மிகத்துல்லியமாக தெரிவிக்கும் வகையில் (real time dashboard) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நோய்களைக் கட்டுப்படுத்தும் மையங்களில் இருந்து தகவல்களை பெறப்பட்டு தரவாக நமக்கு காண்பிக்கிறது.
இது கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை பலியானவர்கள், வைரஸால் பாதிப்படைந்தவர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சிகிச்சை பெறுவர்கள் என அனைத்தையும் கரோனா வைரஸ் சம்பந்தப்பட்டவைகளை ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. இத்தகவலை பொருத்தமட்டில் நேரடியான நிகழ்கால தரவுகளை காட்டுகிறது.
இதில் காட்டப்பட்டுள்ள உலக வரைபடத்தில் எந்த நாட்டில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சிவப்பு நிறத்தில் காட்டுகிறது. தன்னுடைய நாட்டில் அல்லது நகரத்தில் வைரஸ் தாக்கி உள்ளதா என்பதை அறிந்து கொள்ள இந்தத் தளம் மிக உதவுகிறது.
இத் தரவுகளைப் பொருத்தமட்டில் சீனாவில் மாத்திரம் 50 வீதமான இடங்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது என்பது கவலைக்குரிய விடயமே.
இலங்கையைப் பொருத்தவரையில் ஒரே ஒருவர் மாத்திரம் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலங்கை நாட்டவர் அல்ல. சீன நாட்டுப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த (Real Time Dashboard) நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில் எந்தெந்த நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதல் எந்த அளவில் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். இத்தரவுகள் நம்பகமான பதிவுகளை மாத்திரம் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தரவுகளை நீங்களும் நேரடியாக சென்று பார்வையிட....
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Read Time Dashboard