நாம் வுழூ செய்யும் போது எப்படி அதற்கு ஷர்துக்களும், பர்ளுகளும் உள்ளதோ அதேபோன்று அந்த வுழூவை முறிக்கக்கூடிய காரியங்களும் உண்டு. நாம் வுழ...
நாம் வுழூ செய்யும் போது எப்படி அதற்கு ஷர்துக்களும், பர்ளுகளும் உள்ளதோ அதேபோன்று அந்த வுழூவை முறிக்கக்கூடிய காரியங்களும் உண்டு. நாம் வுழூ செய்தபின் இக்காரியங்கள் நிகழ்ந்தால் எதற்கெல்லாம் வுழூ ஷர்த்தாக உள்ளதோ அவைகளை செய்வது ஹராமாகும். உதாரணமாக தொழுதல், குர்ஆனைத் தொடுதல் இவைகள் வுழூ இல்லாமல் செய்வது ஹராமாகும்.
வுழூவை முறிக்கக் கூடிய காரியங்கள் 04 உள்ளன. அவைகள்.....
01) முன், பின் இந்த இரண்டு துவாரங்களிலும் இருந்து ஏதாவது ஒன்று வெளியாதல்.#) ஆண், பெண் இரு பாலரினதும் முன் துவாரத்திலிருந்து ஏதாவதொன்று
வெளியாகினால் வுழூ முறிந்து விடும்.
#) ஆணுடைய முன் துவாரத்திலிருந்து இந்திரியம் மாத்திரம் வெளியானால் வுழூ முறியாது. மேலும் இந்த வுழூவைக் கொண்டு தொழவோ, குர்ஆன் ஓதவோ முடியாது. மாறாக நகம் வெட்டுதல் போன்ற ஏனைய வுழூ சுன்னத்தான காரியங்களை செய்ய முடியும்.
#) ஆண், பெண் இரு பாலரினதும் பின் துவாரத்திலிருந்து என்ன வொன்று வெளியானாலும் வுழூ முறிந்து விடும். அது காற்றாக இருந்தாலும் சரியே!.
02) புத்தி நீங்குதல். (சுயநினைவு இழந்து போதல்)
#) ஆண், பெண் இருபாலரும் தன்னுடைய தூக்கத்தைக் கொண்டோ அல்லது மயக்கத்தை கொண்டோ அல்லது வேறு நிலை மூலமாகவோ தனது சுயநினைவு இழந்தால் அவருடைய வுழூ முறிந்து விடும்.
#) ஆண், பெண் இருபாலரும் தன்னுடைய இரண்டு கால்களையும் மடித்து அடர்த்தியாக பூமியில் அமர்ந்து பின் துவாரத்தில் இருந்து காற்று வெளியாகாத முறையில் உறங்கினாள் வுழூ முறியாது.
உதாரணமாக:-👇👇👇👇👇👇
03) அஜ்னபிய்யத்தான, வளர்ச்சியடைந்த ஒரு ஆணினதும் பெண்ணினதும் மேனி திரையின்றி படுதல்.
#) அஜ்னபிய்யத்தான, வளர்ச்சியடைந்த (பருவ வயதை எட்டிய) ஒரு ஆணின் மேனியும், இன்னுமொரு வளர்ச்சியடைந்த ஒரு பெண்ணின் மேனியும் எந்தவொரு திரையுமின்றி பட்டாள் வுழூ முறிந்து விடும். அது தவறுதலாக பட்டாலும் சரியே!.
#) ஒரு ஆண் அஜ்னபிய்யத்தான (பருவ வயதை எட்டாத) சிறிய பெண்பிள்ளையை தொட்டாலோ அல்லது ஒரு பெண் (பருவ வயதை எட்டாத) சிறிய ஆண்பிள்ளையை தொட்டாலோ வுழூ முறியாது.
04) மனிதனின் அபத்தை கையினால் தொடுதல்.
#) ஆண், பெண் இருபாலாரும் மனிதனின் முன் அபத்தையோ அல்லது பின்துவாரத்தையோ தனது கையின் உட்புறத்தால் எந்தத் திரையும் இல்லாமல் தொடுதல். அது விரல்களின் உட்புரமாக இருந்தாலும் சரியே!. மேலும் அது தன்னுடைய, அல்லது பிறருடையதாக இருந்தாலும் சரியே!.
இந்த சட்டங்கள் அனைத்தும் ஷாஃபி மத்ஹபுக்குறியதாகும்.