பெற்றோர்கள் சிறார்களுக்காக வேண்டி அவர்களது இளமைக்காலத்தில் செய்யும் பங்களிப்பு
உங்கள் குழந்தைகளின் மனங்களையும், அவர்களுக்கு உள்ள தனித்துவமான ஆற்றல்களையும் கண்ணாடிக் குவளைகளைப் போன்று உடைத்து நொருக்கியதன் பின்பு அப்பிள்ளைகள் பற்றி கைசேதப்படும் அல்லது அவர்கள் மீதே குற்றங்களைச் சுமர்த்தும் பெற்றோர்கள் இன்று எம்மில் பெருகி விட்டனர்.
களி மண்ணை அது இறுக முன்பதாக சரியான வடிவத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். அதேபோன்றுதான் சிறுவர்களின் இளமைக் காலப் பருவத்தில் அவர்களின் எதிர்காலம் குறித்து சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
எனவே சிறுவர்களில் இளமைக்காலப் பருவத்தை சிறந்த முறையில் வடிவமைக்கும் சிற்பிகளாக பெற்றோர்கள் பங்களிப்புச் செய்வது இன்றியமையாததாகும்.