நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையை முக்கியமாக, கவனமாக பயன்படுத்த வேண்டும். நமது சமூகத்தில் பலர் தனக்குக் கோபம் வருகின்ற நேரத்தில் தன்னுட...
நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையை முக்கியமாக, கவனமாக பயன்படுத்த வேண்டும். நமது சமூகத்தில் பலர் தனக்குக் கோபம் வருகின்ற நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளை அல்லது தன்னுடைய சொத்துக்கள் மற்றும் ஏனையவைகள் மீது சரமாரியாக சாபம் இடுவதையும், சபிப்பதையும் நாம் காண்கிறோம். அவைகள் எமது பலக்கவலக்கத்தில் சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக இருந்தாலும் இவ்வாறு சபிப்பதை நபிகள் ﷺ அவர்கள் முற்றிலும் எச்சரித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல் ﷺ அவர்கள் கூறிக் காட்டினார்கள்; "நீங்கள் உங்கள் மீதோ அல்லது உங்கள் குழந்தைகள் மீதோ அல்லது உங்களின் பணியாளர்கள் மீதோ அல்லது உங்களின் செல்வங்கள் மீதோ சாபம் இடாதீர்கள். நீங்கள் சபிக்கும் நேரம் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாக இருந்து அதில் உங்களுடைய சாபம் இடம் பெற்றால் அது ஏற்றுக்கொள்ளப்படும்." (அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்)
(அபூதாவூத்:- 1309)
என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே! எங்களுடைய வார்த்தைகளை மிகக்கவனமாக பிரயோகிக்க வேண்டும். பிற மனிதர்களை திட்டுவதையும் அதிலும் குறிப்பாக குழந்தைகளை திட்டுவதையும் பொன்னான இஸ்லாமிய மார்க்கம் முற்றிலும் வெருக்கிறது. பிற மனிதர்களுக்கோ அல்லது எமது குழந்தைகளுக்கோ ஏதாவது ஒன்றை சொல்லுகின்ற பொழுது அவைகளை நல்ல வார்த்தைகளைக் கொண்டும் அழகிய முறையில் அவைகளைக் கையாள வேண்டும். இதுவே இஸ்லாம் எமக்கு கற்பித்த பாடம் ஆகும்.
ஆகவே ஒவ்வொரு நேரமும் கண்ணியமும், மகத்துவமும் மிக்கதாகும். மேலும் அல்லாஹ் துஆக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய நேரமாகவும் இருக்கலாம். எனவே எமது வாழ்க்கையில் பிறருக்கு சாபமான வார்த்தைகளை பிரயோகிப்பதை விட்டும் முற்றிலும் தவிர்ந்து நடந்து கொள்வோம்.