பன்றி இறைச்சி உன்பதால் மனிதனுற்கு ஏற்படும் தீங்குகள்...
மனிதனுக்கு இவ்வுலகத்தில் புனித இஸ்லாம் மார்க்கம் ஒவ்வொரு கட்டுக்கோப்புகளை நிறுவியிருக்கிறது. இதில் இருக்கின்ற ஒவ்வொரு நியதிகளும் ஒரு மனிதன் காலையில் எழுந்து அவன் இரவுப் படுக்கைக்குச் செலுலுகின்ற வரைக்கும் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லித்தருகிறது. அவன் அணிகின்ற ஆடை முதற் கொண்டு அவனுடைய உணவு மற்றும் கழிப்பறை வரைக்கும் அனைத்துமே இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
எனவே இதன் அடிப்படையில் ஒரு மனிதனின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கவேண்டுமென்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:- "தானாகவே இறந்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லி அருக்கப்பட்டதும் ஆகியவைகளைத் தான் அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக ஆக்கி இருக்கிறான்."
(அல்குர்ஆன்:- 02 : 173)
எனவே பன்றியின் இறைச்சியானது மனிதனுக்கு ஹராமாக்கப்பட்ட ஒரு உணவாகும். இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட இந்த உணவை உண்ணும் பொழுது எமக்கு என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பதை உற்று நோக்கலாம்.
மனிதன் பன்றி இறைச்சியை சாப்பிடுவதால் எழுபது விதமான சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பதாக நிறைய அறிவியல் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. மேலும் மனிதர்கள் பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழுக்கள், கொக்கிப் புழுக்கள், ஊசிப் புழுக்கள் போன்ற குடல்ப் புழுக்கள் உருவாகின்றன. மேலும் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம். இதனால் கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
பன்றி என்கின்ற இந்த மிருகம் சேற்றிலும், சகதியிலும், மலத்திலும் வாழக்கூடியது. எனவே இந்தப் பன்றியின் இறைச்சியை உண்பதால் மனிதனின் வயிற்றில் (டேனியா சோலியம்) என்கின்ற ஒரு நாடாப் புழு உருவாகிறது. இது மனிதனின் குடலில் அடிப்பகுதியில் சென்று தங்குகின்றது. அது விடுகின்ற முட்டை மனிதனின் இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. மேலும் இந்த முட்டை மனிதனின் மூளையைச் சென்றடைந்தால் அம்மனிதன் தன்னுடைய நினைவாற்றலை இழந்து விடுவான். மேலும் இந்த முட்டை மனிதனின் இதயத்தைச் சென்றடைந்தால் அவனுக்கு மாரடைப்பு உண்டாகும். மேலும் கண்களைச் சென்றடைந்தால் அவன் இரு கண் பார்வைகளையும் எழுந்து விடுவான். மேலும் ஈரலைச் சென்றடைந்தால் ஈரல் பாதிக்கப்படும்.
இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உறுப்புக்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளது.
மேலும் இந்தப் பன்றி இறைச்சியில் (திரிசுரா திஸ்சுராஸிஸ்) என்று பெயர் வைக்கப்பட்ட மற்றும் ஒரு ஆபத்தான குடல்ப் புழு உள்ளது. இதற்காகவே பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது என பல அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
எனவே இவைகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது இஸ்லாம் எவைகளை யெல்லாம் உண்ணக்கூடாது என்று ஹராமாக்கி இருக்கிறதோ அவைகள் அனைத்தும் மனித உடலுக்கு கேடாகவே உள்ளன. மேலும் இதேபோன்று இஸ்லாம் மனிதனுக்கு ஹலால் ஆக்கியதில் மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.