தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுமாராக 8 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வ...
தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுமாராக 8 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு ஒரு மனிதன் தண்ணீர்க் குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர்க் குடிக்கும் பொழுது தண்ணீர் வயிற்றுக்குள் அதிவேகமாச் செல்லும். அதனால் (ஹெர்னியா) குடலிறக்கம் நோய் ஏற்படும் என்பதாக மருத்துவர்களும், ஆய்வாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள்.
மேலும் இவ்வாறு நின்று கொண்டு தண்ணீர்க் குடிக்கின்ற பொழுது அந்தத் தண்ணீர் குடலில் நேரடியாகப் பாயும். இதனால் தண்ணீரானது குடலின் சுவற்றை நேரடியாக தாக்கும். இப்படித் தாக்கப்படுவதால் குடற் சுவர் மற்றும் இறைப்பை, குடல்ப் பாதை முழுவதும் பாதிக்கப்படுகிறது.
இது போன்று ஒரு மனிதன் நீண்ட நாட்கள் தண்ணீரை நின்று கொண்டு குடித்து வந்தால் இறைப்பைக் குடல்ப் பாதையின் மீழ்த்தன்மை அதிகரிக்கும். இதனால் செரிமானப் பாதையில் செயல் விரக்தி ஏற்படும். மேலும் சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.
எனவே தண்ணீரை நின்று கொண்டு குடிக்கும் போது இப்படிப்பட்ட பல வகையான பிரச்சனைகளும், நோய்களும் ஒரு மனிதனின் உடலுக்குள் ஏற்படுகின்றன. ஆகையால் தண்ணீர் குடிக்கின்ற பொழுது உட்கார்ந்தே குடிக்கவேண்டும் என்று இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நின்றுகொண்டு தண்ணீர்க் குடிப்பதை கடுமையாகக் கண்டித்தார்கள்.
(ஆதாரம்:- முஸ்லிம் - 5393)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நின்று கொண்டு தண்ணீர்க் குடிப்பதை தடை செய்துள்ளார்கள் என்று ஸஹாபாக்களுக்கு மத்தியில் அனஸ் (ரழி) சொன்னார்கள். அப்பொழுது நின்றுகொண்டு சாப்பிடலாமா எனச் சஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரழி) அவர்கள் இது அதைவிட மோசமானது, அருவெருப்பானது என்றார்கள்.
(ஆதாரம்:- முஸ்லிம் - 5394)
மேலும் நபிகள் நாயகம் ஸல் ﷺ அவர்கள் நின்று கொண்டு தண்ணீர்க் குடிப்பதைக் கண்டித்தார்கள் என்றும், நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று தடை செய்துள்ளார்கள் என்றும் புஹாரி எனும் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
(ஹதீஸ் எண்:- 4117 / 4118)
எனவே இப்பொழுது பல ஆராய்ச்சிகளுக்கு பின்னாலும், பல சோதனைகளுக்குப் பின்னாலும் கண்டறிந்து நிரூபிக்கப்பட்ட இச்செய்தியை 1400 வருடங்களுக்கு முன்பே எம்பெருமானார் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லிவிட்டார்கள்.