இவ்வுலகில் அல்லாஹ் படைத்த ஒவ்வொன்றுக்கும் அதற்கு எவ்வாறு ஆரம்பம் ஒன்று உள்ளதோ, அதேபோன்று அதற்கு ஒரு முடிவையும் வைத்தே அல்லாஹ் படைத்துள்...
இவ்வுலகில் அல்லாஹ் படைத்த ஒவ்வொன்றுக்கும் அதற்கு எவ்வாறு ஆரம்பம் ஒன்று உள்ளதோ, அதேபோன்று அதற்கு ஒரு முடிவையும் வைத்தே அல்லாஹ் படைத்துள்ளான். இதனடிப்படையில் ஒரு குழந்தைப் பிறந்தால் அக்குழந்தைக்கு ஏதோ ஒருநாள் நிச்சயம் மரணம் என்ற ஒன்று நிகழ்ந்தே தீரும்.
இவ்வாறு ஒரு குழந்தை பிறந்து அது மரணித்த பின் அந்த ஜனாஸாவுக்கு ஏனைய மனிதர்கள் செய்யக்கூடிய காரியங்கள் உள்ளன. இவ்வாறு செய்யக்கூடியவர்களுக்கு அல்லாஹ் எண்ணற்ற நன்மைகளை எல்லாம் வைத்திருக்கிறான். அவைகள் என்ன வென்பதை நபிமொழித் தொகுப்பிலிருந்து பார்ப்போம்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- யார் ஒருவர் நம்பிக்கைக் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து அதற்காக தொழுகை நடத்தப்பட்டு அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருப்பவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியல்களைப் பெற்றுத் திரும்புவார். அதில் ஒவ்வொரு குவியலும் உஹது மலையைப் போன்றதாகும். மேலும் அந்த ஜனாஸாவிற்கு தொழுகையை மாத்திரம் முடித்து விட்டு அதனை அடக்கம் செய்ய முன்னர் திரும்பி விடுவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்.
(ஆதாரம்:- புஹாரி - 47)
எனவே ஒரு ஜனாசா நிகழ்ந்து விட்டால் அந்த ஜனாஸாவை அடக்குகின்ற கடைசி நேரம் வரைக்கும் இருந்து வல்ல இறைவன் அள்ளித்தரக் கூடிய அந்த இரண்டு குவியல் நன்மைகளையும் எமது மௌத்துக்கு முன்னாள் பெற்றுக் கொள்ள நாங்கள் அனைவரும் முயற்சிப்போமாக.