அல்லாஹ்வின் குத்ரத்தை உலகுக்கு உரத்துச் சொல்லும் அற்புதப் படைப்புகளில் ஜம்ஜம் நீரும், நீரூற்றும் ஒன்றாகும். இந்த ஊற்றுக்கினறானது பல்ல...
அல்லாஹ்வின் குத்ரத்தை உலகுக்கு உரத்துச் சொல்லும் அற்புதப் படைப்புகளில் ஜம்ஜம் நீரும், நீரூற்றும் ஒன்றாகும். இந்த ஊற்றுக்கினறானது பல்லாயிரம் வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும்.
இந்த ஜம்ஜம் நீர் ஊற்றானது ஒரு கடலோ, ஏரியோ, நதியோ, அல்ல. மாறாக அருகில் கடலோ, ஏரியோ, நதியோ அல்லாத பாலைவனத்தில் அமைந்துள்ள இரண்டு, மூன்று நபர்கள் கட்டிப்பிடித்தால் அதற்குள் அடங்கி நிற்கும் 31 மீட்டர் ஆழமுள்ள ஓர் ஊற்றுக் கிணறுதான்!. ஆனால் இந்த சிறிய ஊற்றுக் கிணறானது பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றளவும் ஒருமுறையாவது வற்றியதே கிடையாது. மேலும் இந்த ஜம்ஜம் கிணற்றுக்கு அருகாமையில் எந்தவொரு தாவரமும் வளர்வதில்லை.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் அதில் பாசி படிவதும், கிருமிகள் உற்பத்தியாவதும் சர்வ சாதாரணமான இயற்கை விடயமே. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் மற்ற எல்லா நீர்நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஜம்ஜம் நீரூற்றானது அது உற்பத்தியான காலம் தொட்டு இன்று வரை எந்தவொரு மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வது மாபெரும் அதிசயம்!.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகமிக ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது. இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம் ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளது என்று சோதனையில் தெரியவந்துள்ளது. கல்ஷியம் மற்றும் மெக்னீசியம் எனும் உப்பு மற்ற வகைத் தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்த ஜம்ஜம் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கேதான் மாபெரும் அற்புதம் நடக்கிறது. மற்ற தண்ணீரைப் பிடித்து வைத்தால் சில நாட்களில் அதில் கிருமிகள் உருவாகும். ஆனால் ஜம் ஜம் தண்ணீரை எத்தனை வருடம் பிடித்து வைத்திருந்தாலும் அதில் எந்தவொரு கிருமியும் தென்படாது. இதுவும் ஒரு மாபெரும் அற்புதம் தான்.
வெறும் 31 மீட்டர் ஆழம் கொண்டது இந்த ஜம்ஜம் நீரூற்று. ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் 11,000 லீட்டரும், அதிகபட்சம் 18,500 லீட்டர் தண்ணீரும் பமப் செய்யப்படுகிறது. ஆக ஒரு மணித்தியாலத்திற்குள் 2 கோடியே 880 லட்சம் லீட்டர்கள், ஒரு மாதத்திற்கு 2,073 கோடியே 60 லீட்டர் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.
உலகில் பல பிரதேசங்களில் இருந்து மக்காவிற்கு புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்தக் கிணற்று நீரை ஒரு நபர் குறைந்தபட்சம் 20 லீட்டராவது தனது நாட்டிற்கு எடுத்துக் கொண்டு செல்லாமல் திரும்புவதில்லை. ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு இதிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
எனவே 31 மீட்டர் ஆழம் கொண்ட ஜம்ஜம் கிணறு படைத்து நிற்கும் சரித்திரமோ வரலாற்று நாயகர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி நிற்கச் செய்கிறது.
இது அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை...