இஸ்லாத்தில் அந்நியப் பெண்களை பார்க்கும் விடயத்தில் என்ன தீர்ப்பு?
நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரங்களை தொடர்ச்சியாகவும், நேர்த்தியாகவும் மிகச் சிறந்த முறையில் பேணிப் பாதுகாத்துச் செய்து வந்தவர்கள் நிச்சயமாக நாளை மறுமை நாளில் சிறந்த ஓர் தரஜாவை அடைந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் காலையில் எழுந்து இரவில் தூங்குகின்ற வரைக்கும் மேலும் அவனுடைய வாழ்க்கையில் எதேர்ச்சையாக சந்திக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் சரியான ஒரு தீர்வை முன்வைத்த ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!.
இப்படி எதேர்ச்சையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வையும் அதற்கான தீர்வையும் இப்பொழுது பார்க்கலாம்.
ஜெரீத் பின் அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்கள்:- நான் அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ﷺ அவர்களிடம் அன்னியப் பெண்ணின் மீது எதேர்ச்சையாக பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்பொழுது எனது பார்வையை உடனடியாக திருப்பிக்கொள்ள வேண்டும் என அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
(அபூதாவுத்:- 1,836 / அஹ்மத்:- 18,369 / திர்மிதி:- 2,700 / முஸ்லிம்:- 4,363)
ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அவன் தவறு செய்ய விரும்பி விடுவான். அதனால்தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அன்னியப் பெண்களை நீங்கள் பார்க்காதீர்கள். எதார்த்தமாக அவர்களை நீங்கள் பார்த்தாலும் கூட உங்களுடைய பார்வைகளை உடனே மாற்றிக் கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்கள்.