நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏழு பாவங்களைச் சுட்டிக்காட்டி இவைகள்த்தான் பெரும்பாவங்கள் என்று சொல்லித் தந்துள்ளார்கள். அவைகள் மட்டும் இன்றி வ...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏழு பாவங்களைச் சுட்டிக்காட்டி இவைகள்த்தான் பெரும்பாவங்கள் என்று சொல்லித் தந்துள்ளார்கள். அவைகள் மட்டும் இன்றி வேறு சில பாவங்களையும் சுட்டிக்காட்டி இவைகளும் பெரும்பாவங்களின் பட்டியலில் இடம்பெறும் என்பதையும் கூறியுள்ளார்கள்.
இதனடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறியதாவது;- "ஒரு மனிதர் தமது தாய், தந்தையர்களை ஏசுவது பெரும்பாவங்களில் உள்ள ஒன்றாகும்" என நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்பொழுது சஹாபாக்கள்;- "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தனது தாய் தந்தையர்களுக்கு ஏசுவாரா?" எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்;- "ஆம் ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தைக்கு ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாய்க்கு ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக தம் பெற்றோர்கள் ஏசப்படுவதற்கு அவரே காரணமாகி விடுகிறார்)"
(ஆதாரம்:- முஸ்லிம் - 146)
ஒருவர் மற்றொருவரின் தாய் தந்தையரைக் குறித்து பேசுகின்றார், அவர்களுக்கு ஏசுகின்றார். பதிலுக்கு அவர் இவருடைய தாய் தந்தையர்களுக்கு பேசுகின்றார், அவர்களுக்கு ஏசுகின்றார். இதைத்தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.
எனவே யாரும் யாரையும் ஏச வேண்டாம், இழிவுபடுத்த வேண்டாம். மேலும் யாரும் யாருடைய தாய் தந்தையர்களுக்கும் ஏச வேண்டாம், இழிவு படுத்த வேண்டாம். பொறுமையைக் கடைபிடிப்போம். கோபம் கொள்வதை அல்லாஹ் வெருக்கின்றான். நபிகள் நாயகம் ﷺ வெருகின்றார்கள். இந்தக் கோபத்தில் இருந்து அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...