நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நாம் நன்மைகளை ஈட்டிக்கொள்வதற்கு நிறைய அமற்களைக் காட்டித் தந்துள்ளார்கள். அதனடிப்படையில் இப்பொழுது 2500 நன்மைக...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நாம் நன்மைகளை ஈட்டிக்கொள்வதற்கு நிறைய அமற்களைக் காட்டித் தந்துள்ளார்கள். அதனடிப்படையில் இப்பொழுது 2500 நன்மைகளைப் பெற்றுத் தரும் ஓர் அழகிய திக்ரை இப்பொழுது பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைபிடிக்கும் முஸ்லிம் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைபிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே."
(அவ்விரண்டில் முதலாவது:-)
"ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் பத்து முறை சுப்ஹானல்லாஹ் என்றும், பத்து முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், பத்து முறை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இவ்வாறு (ஒரு நாளில் ஐவேளைத் தொழுகையைக்கும் சேர்த்து, (அதாவது 5 × 30=) 150 முறை கூறுவதாவது மறுமைத் தராசில் ஆயிரத்தி ஐநூறு நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன."(அவற்றில் இரண்டாவது:-)
"படுக்கையில் (அதாவது நாம் தூங்குவதற்குச் செல்வதற்கு முன்பாக) 34 முறை அல்லாஹு அக்பர் என்றும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், 33 முறை சுப்ஹானல்லாஹ் என்றும் கூற வேண்டும். இவ்வாறு கூறும் (34+33+33=) நூறு திக்ர்களானது மறுமைத் தராசில் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்." மேலும் நபி ﷺ அவர்கள் கைவிரல்களால் (திக்ர் செய்து) எண்ணியதும் நான் பார்த்தேன்.நபி ﷺ இவ்வாறு கூறியதைக் கேட்டதும் அவர்களிடம் மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே இவ்விரண்டும் மிக எளிதாக இருந்தும் அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்?' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "உங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது இதனைக் கூறுவதற்கு முன்னராகவே ஷைத்தான் அவரை உறங்க வைத்து விடுகிறான். அது போல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் அவன் (ஷைத்தான்) வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி (எழுந்திருக்கச் செய்து) விடுகிறான்." என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம் அபூதாவூத் - (4,406)
எனவே தொழுகைக்குப் பின் அந்த திக்ருகளை ஓதுவதற்கு ஆயிரத்து ஜநூறு நன்மைகளும், தூங்குவதற்கு முன் அந்த திக்ருகளை ஓதுவதற்கு ஆயிரம் நன்மைகளும், மொத்தமாக (1500+1000=) 2500 நன்மைகள் இந்த அவர்களின் மூலம் கிடைக்கின்றன.அருமைச் சகோதர, சகோதரிகளே இந்த நல்ல அமற்களை நாமும் நமது வாழ்க்கையில் கடைபிடுப்போம். அதிகமான நன்மைகளைப் பெற்று இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அத்தனை பேருக்கும் அருள் பாலிப்பானாக...!
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!