நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் சில உணவுகளைச் சுட்டிக்காட்டி இவைகள் மருத்துவக் குணமுள்ள உணவுகள் என்று கூறினார்கள். அப்ப...
(01)
"உங்கள் மருந்துகளின் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் தேனை அருந்துங்கள்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லுகின்றார்கள். (ஆதாரம்:- புஹாரி - 5,202)🔶️ ஆகவே தேனை எமது தினசரி உணவுடுன் எடுக்கும் பொழுது அதில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளடக்கப் படுகின்றன என்பது தற்கால விஞ்ஞானிகளாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
(02)
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏழு அஜ்வாரக பேரீச்சப் பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு அந்த நாள் எந்த விஷயமும் இடமளிக்காது" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:- புஹாரி - 5, 445)🔶️ இது குறித்து சமீபத்தில் வெளியான ஒரு காணொளியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் இப்பழத்தை உண்டுவிட்டு விஷத்தை அருந்தி நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாக்கை உறுதிப்படுத்தினார்.
(03)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் ஆகும். சாமைத் தவிர" என்று கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் சாம் என்றால் என்ன? என்று கேட்டார்கள் "மரணம்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பதில் தந்தார்கள். ஆதாரம்:- புஹாரி - 5,687)🔶️ ஆகவே மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் இந்தக் கருஞ்சீரகத்தில் மருந்து இருக்கின்றது.
(04)
குருதி உறிஞ்சி எடுப்பது (அதாவது ஹிஜாமா செய்து கொள்ளுவதும்) மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்பதாக நபிகள் நாயகம் ﷺ கூறுகின்றார்கள். ஆதாரம் புஹாரி- (5,202)🔶️ இந்த சிகிச்சையை நபி நாயகம் ﷺ அவர்களும் செய்து இருக்கின்றார்கள் என்பதும் வேறு வேறு ஹதீஸ்களிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆகவே அண்ணல் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மருத்துவ சிந்தனைகளை எமது வாழ்க்கையில் எடுத்து நடக்கவும், மேலும் கொடிய நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவன் நம் அத்தனை பேருக்கும் அருள் பாலிப்பானாக...!
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!