நபிகள் நாயகம் ﷺ அவர்கள் புனித மிஹ்ராஜ் யாத்திரை சென்றிருந்த போது நரகத்தில் அதிகமானப் பெண்களைக் கண்டதாக கூறிக் காட்டினார்கள். எனவே நரகத்...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் புனித மிஹ்ராஜ் யாத்திரை சென்றிருந்த போது நரகத்தில் அதிகமானப் பெண்களைக் கண்டதாக கூறிக் காட்டினார்கள். எனவே நரகத்திற்குள் அதிகமாக நுழைபவர்கள் பெண்கள் என்பதாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பெண்கள் இந்தக் காரியங்களைத் தமது வாழ்க்கையிலிருந்து தடுத்துக் கொள்கின்ற பொழுது அவர்கள் அந்த நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவார்கள் என்று சில காரியங்களைத் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பெண்களுக்கு தடைசெய்த விடயங்கள் என்ன? என்கின்ற விடயங்களை நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
🔸️) பெண்கள் தமது தலையை மழித்துக் கொள்வதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தடை செய்தார்கள். (அதாவது பெண்கள் தனது தலையை மொட்டையடித்துக் கொள்வதை தடை செய்தார்கள்)
(ஆதாரம்:- நஸஈ - 4,963)
🔸️) ஒட்டு முடி வைத்து விடுபவளையும், ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சபித்தார்கள்.
(ஆதாரம்:- புஹாரி - 5,935)
🔸️) "பச்சைச் குத்தி விடுபவளையும், பச்சைக் குத்திக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான்" என நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:- புஹாரி - 5,937)
🔸️) "முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:- புஹாரி - 4886)
எனவே இத்தகைய விடயங்களை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பெண்களுக்குத் தடை செய்தார்கள். மேலும் இது போக ஒரு முறை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தனது மிஹ்ராஜ் யாத்திரியை முடித்துக் கொண்டு வந்த பின்னர் நரகத்தில் கொடுமை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களையும் அவர்கள் ஏன் கொடுமை செய்யப்படுகிறார்கள்? என்பதையும் சொல்லிக் காட்டினார்கள்.