இன்றைய முஸ்லிம்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அழகிய சொற்பொழிவு:- மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன் சமூகத்தாரிடம்: அல்லாஹ்விடம் உதவி தேடுங...
இன்றைய முஸ்லிம்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அழகிய சொற்பொழிவு:-
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன் சமூகத்தாரிடம்: அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும் பொறுமையாகவும் இருங்கள். நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரித்தாக்கி விடுகிறான். இறுதி வெற்றி பயபக்தியுடையோருக்கே கிடைக்கும் என்று கூறினார்.
(அல்குர்ஆன் 7:128)
புனித அல்குர்ஆன் ஆனது முஹம்மத் ﷺ அவர்களின் உம்மத்தர்களாகிய எங்களுக்கே அருளப்பட்டதாகும். எனவே இந்த வேதத்தில் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சமூகத்திற்குச் செய்த போதனைகளைக் கூறிக் காட்டுகிறான் என்றால் அப்போதனையானது எமக்கும் ஏதோ ஒரு வகையில் பயன்படுகிற ஒன்றாகும்.
எனவே இன்றைய முஸ்லிம்களுக்கு இந்த வசனம் நிச்சயமாக பொருந்தும். இக்கட்டான நிலைகளில் பொறுமையைக் கடைபிடித்து, இறைவனிடத்திலே உதவி தேடும் பொழுது அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக எம்மை வந்தடையும். இன்ஷா அல்லாஹ் பயபக்தியுடையவர்களுக்கு, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இறுதி வெற்றி நிச்சயம் உண்டு.

As-safeenah