இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கின்ற பொழுது அவனுடைய உடல் காயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது. இவ்வாறு காய...
அபூ ஹாஸிம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு (உஹதுப் போரின்) போது அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சை அளிக்கப்பட்டது? என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர் "இதைப் பற்றி என்னைவிட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் தற்பொழுது மக்களில் எஞ்சியிருப்பதில்லை. அலி (ரழி) அவர்கள் தம் கேடயத்தில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மேலும் பாத்திமா ரலி அவர்கள் நபி ﷺ அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவி விட்டார். மேலும் (ஈச்சம்) பாய் ஒன்று எடுத்து வரப்பட்டு, அதை எரிக்கப்பட்டு அதைக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய காயத்திற்கு (மருந்திட்டுக்) கட்டுப் போடப்பட்டது" என்றார்கள்.
(ஆதாரம்:- புஹாரி - 3,037)
ஆக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உஹது யுத்தத்தின் போது காயப்படுத்தப்பட்டனர். எனவே அந்தக் காயத்தில் இருந்து வடிகின்ற இரத்தத்தைக் கழுவி விட்டு காயம் ஏற்பட்ட அந்த இடத்தில் ஓர் ஈச்சம் மரத்தின் ஓலையை எரித்து அந்த சாம்பலைப் பூசப்பட்டது.
🔷️ எனவே காயத்திற்கு ஈச்சம் மரத்தின் ஓலையில் சாம்பலே நபி ﷺ அவர்களின் மருந்தாகும்.