நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அதாவது சுவர்க்கம், நரகம், மறுமை நாள், மஹ்ஷர் மைதானம், கப்ருடைய ...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அதாவது சுவர்க்கம், நரகம், மறுமை நாள், மஹ்ஷர் மைதானம், கப்ருடைய வாழ்க்கை என்று பல்வேறுபட்ட முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார்கள். இதனடிப்படையிலேயே அரபு நாடுகளைப் பற்றியும் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்:- "செல்வம் பொங்கிப் பெருகும், அதற்கான சக்காதுக்களைப் பெறுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள். அரபு தேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும். அந்த நிலை ஏற்படாமல் அந்த (மறுமை) நாள் வராது."
(ஆதாரம்:- முஸ்லிம் - 1,681)
இன்று நாங்கள் எமது இரண்டு கண்களின் ஊடாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா!. அரபு நாடுகள் பெரும்பாலும் பாலைவனங்களாகவே இருக்கின்றன. அப்படி இருக்கின்ற அந்த நாடுகளில் இப்பொழுது பனி மழைப் பெய்வதைக் காணலாம்.
2019ஆம் ஆண்டில் சவூதி அரேபிய நாட்டில் பனி மழை பொழிதுள்ளது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் சவூதி அரேபியாவின் தப்பூக் என்ற இடத்திலும் பனி மழைப் பெய்ததாகக் கூறப்படுகின்றது.
மனிதர்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத அந்த பூமியில் நவீன செயற்கை முறையில் விவசாயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதைப் பற்றியெல்லாம் முன்னறிவிப்புகளைச் செய்தார்களோ! அந்த நிகழ்வுகள் எல்லாம் தற்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளதன.
இவைகள் அனைத்தும் ஒரு புறம் இருக்க மதீனாவிலும் பனி மழை பெய்துள்ளது என்பதாகப் பொய்யான வதந்தி வீடியோக்கள் எமக்கு மத்தியில் பரப்பப்பட்டுள்ளன. மக்காவிலும், மதீனாவிலும் இதுவரைக்கும் எந்த ஒரு பனி மழையும் பொழியவில்லை. எனவே அந்த வீடியோக் காட்சிகள் ஈராக்கிலும், ஈரானிலும் நிகழ்ந்த பனி மழையாகும். இதைச் சிலர் மதீனா நகரில்த்தான் பொழிந்துள்ளது என்பதாகப் போலியானத் தகவலை பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதை எம்மில் பலரும் நம்பிக் கொண்டும் உள்ளார்கள்.
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அரபு நாடுகளைப் பற்றிப் பல்வேறு முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அந்த அறிவிப்புகள் எல்லாம் உண்மையாக்குகின்ற வகையில் பாலைவன அரபு தேசங்கள் இன்று சோலைவனமாக மாறுவதை எமது கண்களின் ஊடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.