ஒரு மனிதன் வுழூ செய்யவேண்டுமென்றால் அவனுக்கு 10 நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளையே ஷரத்துக்கள் எனப்படுகிறது. இந்த 10 நிபந்தனைகளும் ஒ...
ஒரு மனிதன் வுழூ செய்யவேண்டுமென்றால் அவனுக்கு 10 நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளையே ஷரத்துக்கள் எனப்படுகிறது. இந்த 10 நிபந்தனைகளும் ஒரு மனிதன் வுழூ செய்யக்கூடிய அந்த நேரத்தில் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். அவன் வுழூ செய்தபின் இந்த ஷரத்துக்களில் ஏதாவது ஒன்று இல்லாமல் போனால் அல்லது நிகழ்ந்துவிட்டால் அவனுடைய வுழூ கண்டிப்பாக முறிந்துவிடும்.
🔵 ஷர்த்துக்கள், பர்ளுகள் என்றால் என்ன? / இவ்விரண்டிற்கும் என்ன வித்தியாசம்? (Click to Read>>>)
வழூ உடைய ஷரத்துக்கள் - 10
🔸️) முஸ்லிம் இல்லாத பிற மதத்தவர் ஒருவர் நாம் செய்கின்ற வுழூவைப் போன்று அவர் செய்தாலும் அது வுழூவாக அங்கீகரிக்கப்பட மாட்டாது.
02) பகுத்தறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்.
🔸️) பகுத்தறிவுக்கு உதாரணமாக:- நெருப்பைத் தொட்டால் சுடும் என்கின்ற அறிவு இருத்தல். சுருக்கமாக பைத்தியம் படித்தவரின் வுழூ ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.
03) மாதவிடாய் மற்றும் பிள்ளைப்பேற்றைவ் விட்டும் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
🔸️) இது பெண்களின் தனித்துவமான நிபந்தனையாகும்.
04) வுழூவுடைய உறுப்புக்களின் தண்ணீர் பட விடாமல் தடுக்கும் ஏதாவது ஒன்று இல்லாமல் இருத்தல்.
🔸️) அதாவது வுழூ செய்யும் போது கழுவக் கூடிய உறுப்புக்களில்; அதில் தண்ணீரைப் பட விடாமல் தடுக்கக்கூடிய (பிசின், ரப்பர் நிறப்பூச்சு) போன்றவை இல்லாமல் இருத்தல் வேண்டும்.
05) வுழூவுடைய உறுப்புக்களில் தண்ணீரை மாற்றக்கூடிய ஏதாவது ஒன்று இல்லாமல் இருந்தல்.
🔸️) இந்த நிபந்தனையும் கிட்டத்தட்ட நான்காவது நிபந்தனையைப் போலவேதான். அதாவது தண்ணீரை மாற்றக்கூடிய மஞ்சள் போன்ற பொருட்கள் வுழூவுடைய உறுப்புக்களில் இல்லாமல் இருத்தல்.
06) வுழூவுடைய பர்ளுகளை அறிந்திருத்தல் வேண்டும்.
🔸️) அதாவது வுழூவுடைய பர்ளுகள் என்னவென்பதை கண்டிப்பாக அறிந்திருத்தல் வேண்டும்.
🔵 வுழூவின் பர்ளுகளும், ஸுன்னத்துக்களும். (Click to Read)
07) வுழூவுடைய ஒரு பர்ளை ஒருவர் அது சுன்னத் என்று உறுதி கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
🔸️) உதாரணமாக:- வுழூவின் போது முகத்தைக் கழுவுவது பர்ளாகும். ஆனால் இந்த பர்ளை ஒருவர் சுன்னத் என்று நினைக்காமல் இருக்க வேண்டும்.
08) வுழூ செய்யக்கூடிய தண்ணீர் பரிசுத்தமானதாக இருத்தல் வேண்டும்.
அடுத்த இரண்டு நிபந்தனைகளும் தொடர் தொடக்கு நிகழ்பவருக்காகும். அதாவது தொடர்ச்சியாக சிறுநீர் வெளியேறிக் கொண்டே இருத்தல் மற்றும் தொடர்ச்சியாக பின் துவாரத்திலிருந்து காற்று வெளியேறிக் கொண்டே இருத்தல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகும்.
09) நேரம் நுழைந்திருக்க வேண்டும்.
🔸️) உதாரணமாக மேலே உள்ள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுபஹ் தொழுகைக்காக வுழூ செய்ய வேண்டுமென்றால் சுபஹ் தொழுகைக்கான அதான் சொன்ன பின்னரே அவருக்கு வுழூ செய்ய முடியும்.
10) தொடர்ச்சியாகச் செய்தல்.
🔸️) அதாவது ஒரு உறுப்பை கழுவியபின், அடுத்த உறுப்பை கழுவுவதற்கு முன் ஒரு சிறிய நேர இடைவெளி விடாமல் தொடர்ச்சியாகச் செய்து முடிக்க வேண்டும்.
இந்த சட்டங்கள் அனைத்தும் ஷாஃபி மத்ஹபுக்குறியதாகும்.