நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மறுமை நாளைப் பற்றியும், சுவர்க்க, நரகத்தைப் பற்றியும், அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றியும் பலவிதமான விடயங...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மறுமை நாளைப் பற்றியும், சுவர்க்க, நரகத்தைப் பற்றியும், அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றியும் பலவிதமான விடயங்களை நமக்கு அறிவித்துத் தந்துள்ளார்கள். அதனடிப்படையில் சொர்க்கத்தின் கதவை முதன் முதலாகத் தட்டக் கூடிய முதலாவது மனிதர் யார்? என்பதைப் பற்றியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
மறுமை நாளில் கேள்வி கணக்கிற்காக மனிதர்கள் அவர்களுடைய கப்ருகளில் இருந்து எழுப்பப்படுகின்ற பொழுது முதன் முதலாக கபுரில் இருந்து எழுப்பப்படுவர் எங்கள் தலைவர் முஹம்மத் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஆவார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- "முதன்முதலாக (மறுமை நாளில்) கப்ரிலிருந்து உயிர்ப்பித்து எனப்படுபவர் நானேதான்."
(ஆதாரம்:- முஸ்லிம் - 4,575)
இதே போன்று ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:- "மறுமை நாளில் ஆதமுடைய (அலை) மக்கள் அனைவருக்கும் தலைவராக நானாகத்தான் இருப்பேன்."
(ஆதாரம்:- முஸ்லிம் - 4,575)
இதேபோன்று மற்றுமொரு இடத்தில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "நான்தான் மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமானவர்களால் பின்பற்றப் படுபவர் ஆவேன். நானே சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் ஆவேன்."
(ஆதாரம்:- முஸ்லிம் - 331)
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்:- "நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் தலை வாசலுக்குச் சென்று அதைத் திறக்கும்படி சொல்லுவேன். அப்போது சொர்க்கத்தின் காவலர் நீங்கள் யார்? என்று (என்னிடம்) கேட்பார். நான் தான் முஹம்மத் (ﷺ) என்று (அவருக்கு) நான் பதில் சொல்லுவேன். அதற்கு அவர் உங்களுக்காகவே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். உங்களுக்கு முன் வேறு யாருக்கும் நான் சொர்க்கத்தின் வாசலைத் திறக்க கூடாது எனப் பணிக்கப்பட்டு உள்ளேன் என்று அந்த சொர்க்கத்தின் காவலரான மலக்கு கூறுவார்."
(ஆதாரம்:- முஸ்லிம் - 333)
சுப்ஹானல்லாஹ்...
01) கியாமத் உடைய நாளில் முதன்முதலாக கப்ரிலிருந்து உயிர்ப்பித்து எழுப்பப்படுவதும் எங்கள் தலைவர் முஹம்மத் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் தான்.
02) மறுமை நாளில் ஆதமுடைய மக்கள் அனைவருக்கும் தலைவர் எங்கள் தலைவர் முஹம்மத் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் தான்.
03) சுவர்க்கத்தில் வாசலை முதன் முதலாகத் தட்டுவதும் எங்கள் தலைவர் முஹம்மத் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் தான்.
04) முதன்முதலாகச் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படுவதும் எங்கள் தலைவர் முஹம்மத் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்குத் தான்.