வானவர் மலக் மாலிக் (அலை) அவர்கள் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் சொல்வது என்ன என்பதையும், இவர்களுடைய பணி என...
வானவர் மலக் மாலிக் (அலை) அவர்கள் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் சொல்வது என்ன என்பதையும், இவர்களுடைய பணி என்வென்பதையும் ஆதாரப் பூர்வமாக ஆராய்வோம்.
அல்லாஹுத்தஆலா தனது அருள் மறையாம் திருக்குரானில் பின்வருமாறு கூறுகின்றான்; "(நரகவாசிகள்) மாலிக்கே! இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும்." (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்) என்று சத்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது) நிச்சயமாக நீங்கள் இதே நிலையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார்.
(அல்குர்ஆன் 43 : 77)
மேலும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்; "நான் இன்று இரவு இரண்டு நபர்களை (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்; (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்) அதோ அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார்."
(புஹாரி:- 3236)
எனவே நரகத்தின் பாதுகாவலராக இருக்கக்கூடிய வானவர்களுக்குத் தலைவராக மாலிக் (அலை) அவர்கள் இருப்பார் என்பதும் இந்தக் குர்ஆன் வசனத்தின் மூலமாகவும், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஹதீஸின் மூலமாகவும் அல்லாஹ் எமக்குத் தெரியப்படுத்துகின்றான்.
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "நான் மிஹ்ராஜ் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நரகத்தின் காவலரான வானவர் மாலிக் (அலை) அவர்களைப் பார்த்தேன்" என்பதாகக் கூறிக் காட்டினார்கள்.
(புஹாரி:- 3239)
Yah allah engal anaivarhalaiyum narahathai vittum padhuhapayaha����Aameen
ReplyDeleteAameen
Delete