அல்லாஹ்வின் கருணையினாலும், அவனுடைய ரஹ்மத்தினாளும் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்றா...
அல்லாஹ்வின் கருணையினாலும், அவனுடைய ரஹ்மத்தினாளும் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்றால் எங்களுடைய 'ரிஸ்க்' இன்னும் முடியவில்லை என்பது தான் அர்த்தம். எங்களுடைய ரிஸ்க் எப்பொழுது எமக்குக் துண்டிக்கப்படப் போகின்றது என்பதை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.
எனவே அல்லாஹ்வின் கருணையினாலும், ரஹ்மத்தினாலும், வாழக்கூடிய நாம் அவனைத் திருப்தி கொள்ளச் செய்வதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏராளமான அமற்களைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். எனவே அப்படியான ஒரு செய்தியை இப்பொழுது நாம் பார்ப்போம்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- (ஒரு அடியான்) ஒரு முறை உணவு உற் கொண்ட பின் அல்லது ஒரு முறை பானம் அருந்திய பின் அதற்காக (அல்ஹம்துலில்லாஹ்) என்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற பொழுது அந்த அடியான் குறித்து அல்லாஹ் திருப்தி கொள்கின்றான்.(முஸ்லிம்:- 5,282)ஆகவே நாம் ஒருக் கைப்பிடியளவு உணவு உற் கொண்டாலும் சரி, அல்லது ஏதாவது பானம் அருந்தினாலும் சரி அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு அடியான் செய்கின்ற பொழுது அல்லாஹ் அவன் மீது இரக்கம், பாசம் கொள்கிறான், அவனைப் பொருந்திக் கொள்கின்றான் என்று நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
எனவே எங்களுடைய வாழ்க்கையில் இவ்வாறான நல்ல அமல்களைச் செய்து அல்லாஹ் எங்கள் மீது திருப்தி பின் அவனுடைய ரஹ்மத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்போமாக...
இன்ஷா அல்லாஹ்...!