நாம் உறக்கத்தில் இருக்கின்ற பொழுது சில நேரம் கனவுகளைக் காண்கின்றோம். அதில் சில கனவுகள் நாம் விரும்பக்கூடிய கனவாக இருக்கும். சில கனவுகள் ...
எனவே இது குறித்து நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அருமையான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். அவை என்னவென்பதை இப்பொழுது நாம் உற்று நோக்குவோம்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- கனவுகள் மூன்று வகைப்படும். முதலாவது:- மன பிரம்மை (விழிப்புநிலைக் கனவுகள்) இரண்டாவது:- ஷைத்தானின் அச்சுறுத்தல். (கெட்ட கனவுகள்) மூன்றாவது:- அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்று எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் இறைவனைத் தொழட்டும். இறைநம்பிக்கையாளர்கள் காணும் (நல்ல, உண்மையான) கனவுகள், நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முதலாவதாகக் கூறிய கனவின் வகை மன பிரம்மை கனவுகளாகும். அதாவது நாம் ஒரு விடயத்தை நினைத்துக் கொண்டு தூங்கச் செல்கின்ற பொழுது அந்த விடயம் எங்களுடைய கனவில் ஏற்படும் இதுவே மனபிரம்மைக் கனவுகளாகும்.
(திர்மிதி:- 2196)
இது போன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இரண்டாவதாகக் கூறியது ஷைத்தானின் தீண்டுதல் மூலமாக வரக்கூடிய கனவுகளாகும். அதாவது ஒரு பயங்கரமான எமக்கு பயத்தையும், அச்சுறுத்தலையும் தரக்கூடிய கூடிய கனவுகளாகும்.
ஆக ஷைத்தானுடைய தீண்டுதல் மூலமாக ஏற்படக்கூடிய இந்தக் கனவுகளைக் காண்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கனவு காண்பவர்கள் எழுந்து இறைவனைத் தொழுது கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மூன்றாவதாகக் கூறியது இறைவனிடம் இருந்து வரக்கூடிய நற்செய்திகளாகும்.
ஆகவே நாம் உறங்கச் செல்வதற்கு முன்னால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அழகிய முன்மாதிரிகளை கற்றுத் தந்துள்ளார்கள். அந்த முன் மாதிரிகள் அனைத்தையும் எங்களுடைய வாழ்க்கையில் நாம் எடுத்து நடந்து கொள்ள வேண்டும்.
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய அனைத்து முன்மாதிரிகளையும் எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனைபேருக்கும் கிருபை செய்வானாக.....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS