நாம் எங்களுடைய வாழ்க்கையில் அதிக அதிகமான துஆக்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக எமக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் இருந்து...
நாம் எங்களுடைய வாழ்க்கையில் அதிக அதிகமான துஆக்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக எமக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் மீண்டு வருவதற்காக வேண்டி நாம் நிறையவே துஆக்களை செய்து கொண்டிருக்கின்றோம்.
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டிய ஓர் அற்புதமான, அழகான, அருமையான துஆவைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். இந்த துஆவை தினசரி ஓதுவருவதன் மூலம் எமது இறுதி முடிவான மரணத்தை வென்றெடுப்பதற்கு ஓர் காரணகர்த்தா விளங்குகின்றது.
اَلَّهُمَّ إِنِّي اَعُوْذُبِكَ مِنَ الْهَدْمٍ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا"அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹத்மி, வ அஊது பிக்க மினத் தரத்தீ, வ அஊது பிக்க மினல் கரகி, வல் ஹரகி, வல் ஹரமி, வ அஊது பிக்க அய் யத்தகப்பதனியஷ் ஷைத்தானு இன்தல் மவ்த், வ அஊது பிக்க அன் அமூத்த ஃபீ ஸபீலிக முத்பிரன், வ அஊது பிக்க அன் அமூத்த லதீகா,"
பொருள்:-
இறைவா நான் உன்னிடம் கட்டிடம் இடிந்து விழுந்து கொல்லப்படுவதை விடும் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் உயரமான இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்படுவதை விடும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் தள்ளாமை, தீயில் எரிந்து இறத்தல், நீரில் மூழ்கி இறத்தல், ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் மரணத்தின் போது ஷைத்தான் என்னை இறாஞ்சித் செல்வதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், உன் பாதையை விட்டுப் புறமுதுகு காட்டியவனாக ஓடிவந்து மரணிப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் தேள் (பாம்பு போன்ற நச்சு உயிரினங்கள்) கடித்து இறந்து போவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
மேற்கண்ட இந்த ஹதீஸை அபுல் யஸர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்:- அபூதாவூத் - 1,328 / நஸாயீ - 5,436 / 5,437)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித்தந்த இப்படியான நல்ல துஆக்களை எமது வாழ்க்கையில் அன்றாடம் ஓதி இறைவனுக்கு பொருத்தமான மனிதர்களாக மாறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் அருள் பாலிப்பானாக.....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS