இஸ்லாத்தின் இரண்டாவது மிகப் பெரும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஒவ்வொரு ஆண்களும் பள்ளிக்குச் செல்வதை இஸ்லாம் கட்டாயமாக்கியு...
எனவே ஒரு மனிதன் எவ்வாறு பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கின்ற பொழுது அவர் எவ்வாறான ஒழுக்கங்களையும், பண்புகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லிக் காட்டியிருக்கின்றார்கள். எனவே அந்த ஒழுக்கங்களையும், பண்புகளையும் ஆராய்வோம்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும், கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்துக்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்துக்களை) பூர்த்தி செய்யுங்கள்."அதாவது தொழுகைக்காகப் பள்ளிக்குச் செல்லக்கூடிய நாம் அவசரமில்லாமல், கண்ணியமான முறையில் அமைதியாகச் செல்ல வேண்டும். அதுபோல் பள்ளிக்குச் சென்ற பொழுது அங்கு அப்பொழுது ஜமாஅத்துடன் கிடைக்கின்ற ரகஅத்துக்களை தொழுது கொள்ள வேண்டும். தவறிப்போன எஞ்சிய ரகஅத்துக்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
(புஹாரி:- 636)
அதுபோல் நாம் ஜமாத் நடைபெறுவதற்கு முன்பாகவே தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்து இருப்பதற்கும் அதிகப்படியான, சிறப்புமிக்க நன்மைகள் உண்டு என்பதையும் ஒருகணம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே இதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஸுன்னதைப் பின்பற்றியவர்களாகவும், ஒழுக்கமான முறையிலும், கண்ணியமான முறையிலும் நாம் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்லுவோம்.
இன்ஷா அல்லாஹ்...!
COMMENTS