ரமலான் நோன்பின் நன்மைகள்
அல்லாஹ் ஓர் அடியானின் மீது ஒரு தாய் தனது பிள்ளை மேல் வைத்திருக்கும் அன்பைவிட 70 மடங்கு அதிகமான அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கின்றான். இப்படிப்பட்ட அல்லாஹ் தனது அடியானை பகல் முழுவதும் பசியில் வாட விட்டு நோன்பு இருக்கச் சொல்கின்றான் என்றால் அதற்குல் நிச்சயமாக ஆழமான நன்மைகள் பொதிந்து இருக்கின்றன.
எனவே இந்த நோன்பு நோற்பதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் ஏராளமான நன்மைகளை அல்லாஹுத்தஆலா வைத்திருக்கின்றான். இதனடிப்படையில் இன்மையில் ஒரு மனிதன் நோன்பு நோட்பதன் மூலம் அவனுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஏராளமான நன்மைகள் இருப்பதை தற்போதைய விஞ்ஞானமும் உறுதி செய்கின்றது.
அடுத்ததாக மறுமையில் அல்லாஹுத்தஆலா ஏராளமான நன்மைகளை இந்த நோன்பு நோற்றவர்களுக்கு வைத்திருக்கின்றான். அவைகள் என்னவென்பதைப் பற்றித்தான் இப்பொழுது நாம் ஆதாரப் பூர்வமாக ஆராய இருக்கின்றோம்.
01> ரமலான் மாதத்தில் செய்யும் ஓர் உம்ராவுக்கு ஓர் ஹஜ்ஜுடை கூலியை அல்லாஹ் வாரி வழங்குகின்றான்.
(புஹாரி:- 1,782)
02> அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "யார் ஒருவர் ரமலான் மாதத்தில் இமானுடன், நன்மையை எதிர்பார்த்து, நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
(புஹாரி:- 38)
03> ரமலான் மாத இரவில் யார் நின்று அல்லாஹ்வை தொழுகின்றார்களோ அவர்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
(புஹாரி:- 37)
04> ரமலான் மாதத்தில் நோன்பு நோட்பவர்களுக்கு அளப்பெரிய, அளவுக்கு அதிகமான, அபரிமிதமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகின்றான்.
(புஹாரி:- 1,904)
05> "ரய்யான்" என்று அழைக்கப்படும் சுவனத்து வாயல் ஒன்று உள்ளது. அந்த வயலினூடாக நோன்பு நோற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நுழையமுடியாது.
(புஹாரி:- 3,257)
ஆகவே இவ்வருட ரமலானை நாம் பயன்படுத்திக் கொள்வோம். மேலும் அதிக அதிகமான நன்மைகளைக் கொள்ளையடித்துக் கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்வானாக...
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
As-safeenah


COMMENTS