அல்லாஹ்வால் எமக்குக் கடமையாக்கப்பட்ட ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது பெரும் கடமையாக தொழுகை விளங்குகின்றது. மகத்தான இத் தொழுகையை முடித்தவுடன்...
மகத்தான இத் தொழுகையை முடித்தவுடன் சில சுன்னத்தான துஆக்களையும் ஓதிக் கொள்வதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவைகளைக் குறித்துத்தான் இப்பொழுது நாம் ஹதீஸ் தொகுப்பில் இருந்து ஆராயவுள்ளோம்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்."
(புகாரி:- 842)
ஆக இந்த ஹதீஸின் மூலம் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தொழுகையை முடித்தவுடன் அதாவது ஸலாம் கொடுத்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று 'தக்பீர்' சொல்லுவார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும்....
ஆகவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஓதும்படி காட்டித்தந்த துஆக்கள்...
01> அல்லாஹு அக்பர்...
02> அஸ்தஃபிருல்லாஹ்...
03> அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம், வமின்கஸ்ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்...
ஸவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் ('அஸ்தஃபிருல்லாஹ்' என்று கூறி) மூன்று முறை இஸ்திஃபார் செய்வார்கள். மேலும் அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம், வமின்கஸ்ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம். (இதன் பொருள்:- இறைவா நீ சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகின்றது. நீ மகத்துவமும், கண்ணியமும் உடையவன்) என்று கூறுவார்கள்.
(முஸ்லிம்:- 931)
01> அல்லாஹு அக்பர்...
02> அஸ்தஃபிருல்லாஹ்...
03> அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம், வமின்கஸ்ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்...
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித்தந்த இத்தகைய துஆக்களை நாமும் எமது வாழ்க்கையில் கடைபிடித்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை போருக்கும் கிருபை செய்வானாக...
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
As-safeenah


COMMENTS