இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் பலரிடத்தில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் வளமை இருக்கின்றது. அதேபோன்று தான் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் தனத...
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் 'அள்பா' என்று பெயர் வைக்கப்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்று இருந்தது. அந்த ஒட்டகம் பந்தயத்தில் வேறு எந்த வொரு ஒட்டகமும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அந்த ஒட்டகம் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லீம்களுக்கு மன வேதனையை அளித்தது. இதை அறிந்த நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்" என்று கூறினார்கள்.
(புஹாரி:- 2,872 / 6,501)
ஆக 'அள்பா' எனும் ஒட்டகத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எமக்கு கற்றுத் தரும் பாடம் இந்த உலகத்தில் எந்த ஒன்றும் உயர்வாக இருந்தாலும் அதை ஒரு நாள் அல்லாஹ் தாழ்த்திய தீருவான். இதுதான் நியதியாகும்.
எனவே பிற மனிதர்களை எம்மில் நாம் மட்டம் தட்டாமல் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எப்போது அல்லாஹ் அவர்களை விட எம்மைத் தாழ்த்துவான் என்பது எமக்குத் தெரியாது.
ஆக எங்களுடைய வாழ்க்கையில் இறைவனுடைய படைப்புக்கள் அனைத்தையும் மதித்து நடந்து கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ்...
COMMENTS