அல்லாஹ் அவனது புனித வேதமாகிய அல்-குர்ஆனை எப்படி ஓத வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகின்றான்.
நாம் அனைவரும் புனித அல்-குர்ஆனை தொடர்ந்தும் ஓதி வருகின்றோம். ஆனால் இறைவன்; அல்லாஹ் கூறியது போன்று நாம் பனித அல்-குர்ஆனை ஓதுகின்றோமா?.
ஆம். அல்லாஹ் அவனது புனித வேதமாகிய அல்-குர்ஆனை எப்படி ஓத வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகின்றான்.
(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் (பாது)காவல் தேடிக் கொள்வீராக!.
(அல்-குர்ஆன் - 16:98)
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும் நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!.ஆக புனித அல்-குர்ஆனை ஓதுவதற்கு முன்பாக ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடியதன் பின் அதனைத் தெளிவாகவும்; நிறுத்தி, நிதானமாகவும் ஓத வேண்டும் என்பதாக அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
(அல்-குர்ஆன் - 73:4)
எனவே நாமும் இதனைப் பின்பற்றி புனித அல்-குர்ஆனை ஓதிக் கொள்வோமாக...
COMMENTS