மையத்து எரியுதென
நிய்யத்து ஒன்றாகவே
போராடுகிறோம். மரணித்த_நம்
ஒற்றுமை
மையத்தின் மூலமாவது
மீண்டு வரவேண்டும்!.
தொழுகையில்
தொப்பிக்காக
சண்டைபிடித்தோம்!
அத்தைஹியாத்தில்
விரலுக்காகவும்
சண்டைபிடித்தோம்!
நெஞ்ஜுக்காக
சண்டைபிடித்தோம்!
சலவாத்துக்கும்
சண்டைபிடித்தோம்!
சலாத்துக்கும்
சண்டைபிடித்தோம்!
விரதம் காணவும்
சண்டைபிடித்தோம்!
விருந்துக்காகவும்
சண்டைபிடித்தோம்!
சடலத்தை தூக்கும் போதும்
சண்டை பிடித்தோம்!
அடக்கும் போதும்
சண்டை பிடித்தோம்!
குனூத்துக்கும்
சண்டை பிடித்தோம்!
கூட்டு துஆவுக்கும்
சண்டை பிடித்தோம்!
ஆத்மீகம் சொல்லப்போய்
அவசரப்பட்டோம்...
ஆத்திரப்பட்டோம்..
அதனால்
தனக்கொரு தனிப்பள்ளியெனப்
பிரிந்துவிட்டோம்!
குர்ஆனுக்கும்
சுன்னாவுக்கும்
ஞாயம் கேட்டு
காவல் நிலையங்களில்
கைகட்டி நின்றோம்!
இயக்கக்கருத்துக்களை
இஸ்லாமெனச்சொல்ல
கலிமா சொன்னவனை
காட்டிக்கொடுத்தோம்!
பாவத்தில் ஒன்றாவே
சேர்ந்து வாழ்ந்தோம்!
நன்மையில்தானே
பிழவுபட்டோம்!
பயன்தரும் துஆக்கள்
ஏராளம் இருந்தும்
பயன்பெறமுடியா
பாவிகள் ஆனோம்!
ஒற்றுமை இழந்ததனால்தானே
சிலைவணங்கிகளுக்கு
முன்னால்
சிலந்தி வலைகளானோம்!
மையத்து எரியுதென
நிய்யத்து ஒன்றாகவே
போராடுகிறோம்!
பாவத்தில் ஒன்றாவே
சேர்ந்து வாழ்ந்தோம்!
நன்மையில்தானே
பிழவுபட்டோம்!
பயன்தரும் துஆக்கள்
ஏராளம் இருந்தும்
பயன்பெறமுடியா
பாவிகள் ஆனோம்!
ஒற்றுமை இழந்ததனால்தானே
சிலைவணங்கிகளுக்கு
முன்னால்
சிலந்தி வலைகளானோம்!
மையத்து எரியுதென
நிய்யத்து ஒன்றாகவே
போராடுகிறோம்!
மரணித்த_நம்
ஒற்றுமை
மையத்தின் மூலமாவது
மீண்டு வரவேண்டும்!
மீண்டும் வரவேண்டும்!!
COMMENTS