வானவத் தலைவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிவேகமாக பூமிக்கு வேகமாக வருகை தந்த நான்கு சந்தர்ப்பங்கள் வருமாறு:-...
பின்பு "அந்த நான்கு சந்தர்ப்பங்களும் என்ன?" என்பது குறித்து நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டார்கள்.
முதலாவது முறை:-
ஸெய்யிதுனா நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூத்துடைய நெருப்பில் தூக்கி எறியப்பட்டவுடன் வந்தேன். அந்நேரத்தில் நான் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகாமையில் இருந்தேன். அல்லாஹ் எனக்கு அந்தத் தீயை குளிர வைக்கும் படி கட்டளையிட்டான். அப்பொழுது அதிவேகமாக நான் அர்ஷை விட்டும் விலகி ஏழு வானங்களையும் கடந்து, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்த பூமிக்கு வந்து சேர்ந்தேன்.
இரண்டாவது முறை:-
மினாவில் வைத்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களது அருமைப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைக் குர்பானி (தியாகம்) கொடுக்கக் போகப் போகும் சமயத்தில் வந்தேன்.
செய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர்கள் தனனு கத்தியால் அவர்களது அருமை மகனை அறுப்பதற்கு முற்படும் சமயத்தில், அதற்குப் பகரமாக ஒரு செம்மறி ஆட்டைக் கொடுக்குமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அந்தச் செய்தியை நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக அதி வேகமாக வந்தேன்.
மூன்றாவது முறை:-
நபி யூஸுப் (அலை) அவர்களை, அவர்களது சகோதரர்கள் பாழுங்கிணற்றினுள் வீசி எறிந்த போழுது வந்தேன். அப்பொழுது அதி வேகமாக வந்த நான் நபி யூஸுப் (அலை) அவர்கள் அந்த ஆழமான பாழுங்கிணற்றின் அடிப்பகுதியை அடைவதற்கு முன்பதாகவே என் சிறகுகளை அவர்களுக்கு கீழே வைத்து அவர்களைக் கைதாங்கினேன்.
நான்காவது முறை:-
இருதியாக, யா ரஸூலல்லாஹ் நீங்கள் உஹது யுத்தத்தில் இருக்கும் பொழுது தங்களின் முபாரக்கான பல் உடைப்பட்டு, காயமுற்ற பொழுது தங்களுக்காக வருகை தந்தேன்.
உங்களது புனிதமிகு இரத்தம் பூமியை அடைய முன்னர் அதைக் கைதாங்குமாறு அல்லாஹூத்தஆலா எனக்கு உத்தரவிட்டான். அப்படியே தங்களின் இரத்தம் இந்த பூமியை அது தொடுமேயானால், இந்தப் பூலோகம் அழியும்வரை அங்கு எத்தகைய புல், பூண்டும், தாவரமும் முளைக்காது என்று கூறினான். இதைக் கேட்டவுடன், அதி வேகமாக வந்தேன். என் சிறகுகளால் தங்களின் இரத்த்தைத் தாங்கிக் கொண்டேன்.
(நூல்: ரூஹுல் பயான்)
COMMENTS