பொறாமை கொள்ளாதே!
குறையுள்ள இந்த அப்பில் பழத்தின் தோற்றம் கண்ணாடி ஊடாக எமக்கு அழகாகத்தான் தெரிகின்றது. ஆனால் அந்தத் தோற்றம் உண்மையல்ல...
அதுபோல்தான் நாம் பார்த்துப் பொறாமை கொள்ளும் மனிதர்களும்...
அவர்களின் தோற்றம் அழகாகவே தெரியும். எவ்வித குறையுமில்லாது நன்றாக வாழ்கின்றார்கள் போன்றுதான் விளங்கும். ஆனால் அவர்களின் பிரச்சினைகள், கவலைகளை இறைவன் மட்டுமே அறிவான்.
குடும்பப் பிரச்சினை, நோய், கடன் போன்றவைகளால் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் உடைந்து போயிருப்பார்கள்.
அவர்களின் பிரச்சினைகளை நாம் அறிந்தால் அவர்கள் மீது பொறாமை கொண்டதற்காக எம்மை நாமே நொந்து கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனையும் செய்வோம்...
பொறாமை களைவோம்...
மக்களை நிம்மதியாக வாழ விடுவோம்...
- பாஹிர் முஸ்தபி -
COMMENTS