இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) கூறினார்கள்:
"நான், எனக்கு, என்னிடம்" போன்ற வார்த்தைகள் வழிகேட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
இந்த மூன்று சொற்களாலும் தான் இப்லீஸ்,பிர்அவ்ன்,காரூன் போன்றோர் சோதிக்கப்பட்டனர்.
👉இப்லீஸ் : (நான் அவரை விடச்சிறந்தவன்) அல்குர்ஆன்- 7:12
👉பிர்அவ்ன்: ( எகிப்தின் ஆட்சி எனக்குரியதல்லவா...) அல்குர்ஆன்- 43:51
👉காரூன்: (என்னிடமுள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது) அல்குர்ஆன்- 28:78
பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறரது ஆற்றல், திறமைகளை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும்.
தான் மட்டும்தான் என்ற தற்பெருமையைத் தவிர்க்க வேண்டும்.
பிறர் தவறிழைக்கும் போது அழகிய முறையில் சுட்டிக் காட்டவேண்டும்.
பிறரது கருத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை பெருமை, பொறாமையின்றி ஆக்கப்பூர்வமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
மறுபுறம்...
தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தவறுகளை ஏற்றுக் கொள்வது கௌரவக் குறைவல்ல. மாறாக ஏற்காமலிருப்பதுவே பேரிழுக்கு.
உண்மையை மறுப்பதும் (தன்னை உயர்வாக நினைத்து) பிறரை இழிவாகக் கருதுவதும் பெருமையாகும் என்பது நபிமொழி.
✍️ஆக்கம்
பாஹிர் முஸ்தபி
COMMENTS