அல்ஹம்துலில்லாஹிரப்பில் ஆலமின் அல்லாஹும்ம ஸல்லி அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஅலாஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மாஈன்.
இம்மையில் யாவருக்கும் கிருபை செய்கிறவனும் மறுமையில் தன் பக்தர்களுக்கு மாத்திரம் அருள்பாலிப்பனுமாகிய அல்லாஹ்வின் நாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு எமது கண்ணியமுள்ள முஸ்லிம், மு..மின் பெரியார்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே தாங்களுக்கு அறியத்தருவது கிட்டத்தட்ட (100) நூறு வருடங்களுக்கு முன் “அஸ்மாஉல் ஹுஸ்னாவின் தக்ஸ்றுகள்”என்ற கிதாப் மூலம் வாசித்ததை தாங்கள் எல்லோருக்கும் அறியத்தர ேவண்டும் ஆதரவு வைத்து பிஸ்மிலுடைய மகிமையும் புனிதத் தன்மையும் கருத்திற்கொண்டு பிஸ்மிலை எல்லா நற்காரியங்களுக்கு தினமும் ஓதிவருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
எங்கள் இறைவன் அல்லாஹு ஸுப்ஹான வதஆலாநாயன் கலம் எனும் எழுதுகோலை முத்தில் நின்றும் படைத்துள்ளான் நாம் (500) ஐநூறு வருடங்கள் பயணம் செல்லும் நீளம் தான் கலத்தின் நீளமாகும். கலத்தின் நின்றும் மை வெண்மையாக ஓஒளிக்குமாற்போல் நூர் எனும் ஒளி பிரகாசம் ஒளிக்குது.
அல்லாஹு ஸுப்ஹான வதஆலா நாயன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் எனும் நாமத்தை எழுதும்படி கட்டளையிட்டான். கலம் பிஸ்மிலை 700 எழுநூறு வருடத்தில் எழுதி முடித்தது. அப்போது அல்லாஹு ஸுப்ஹான வதஆலா கூறினார் ஸெய்யதினா முஹம்மது ஸல்லலாஹ் அலைஹிவஸலாம் அவர்களுடைய உம்மத்தில் யாராகிலுமொருவன் ஒரு விடுத்தம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதினால் (700) எழுநூறு வருடம் ஸவாப் நன்மைகள் எழுதுவேன் என்று சொன்னான்.
அல்லாஹு ஸுப்ஹான வதஆலா நாயன் சுவர்க்கத்தில் பிஸ்மி ஒருதூண்,அல்லாஹ் ஒரு தூண், ரஹ்மான் ஒரு தூண், ரஹீம் ஒரு தூண் என நான்கு தூண்கள் உள்ளன. பால் ஆறு, தேன் ஆறு, மது ஆறு, நீர் ஆறு இதன் கூற்றுப்படி பிஸ்மியுடன் அல்ஹம்துஸுரை ஓதி ஸலவாத்து 11 தடவைகள் ஓதிய பின் (1111) ஆயிரத்து நூற்றி பதினொரு தடவைகள் ஓதவும். இன்ஷா அல்லாஹ் 777,700 ஏழுலட்சத்து எழுபத்தி ஏழாயிரத்தி எழுநூறு வருடங்கள் ஸவாப் செய்த நன்மைகள் எழுதப்படும்.
ஹதீஸ் ஆதாரம் எங்கள் நாயகம் ஸெய்யதினா முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உம்முல் மு.்.மீனின் ஸெய்யிதுனா ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். யாராவது சாப்பிட இருந்து ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதவம் அவ்வாறு ஓதுவதை மறந்துவிட்டால் “ பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு என்று ஓதிக்கொள்ள வேண்டும்.
(அபுதாவூத் ஷரீப்-பாகம் 3, பக்கம் 358)
எந்த தொழிலை ஆரம்பிக்கும் போது பிஸ்மிலைக் கொண்டு ஆரம்பித்து முடியும்போது அல்ஹம்துலில்லாஹ் என கூறுங்கள் அல்லாஹு ஸுப்ஹானா வத ஆலா நமக்கு ரஹ்மத் செய்வானாக.
இன்னும் புனித குர்ஆனில் சுறா (அல்நம்ல்-எறும்புகன்) (27-30) ஆயத்தில் “இன்னஹு மின் ஸுலைமான வஇன்னஹு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
மேல் குறிப்பிட்ட ஆதாரங்கள் படி எந்த காரியங்களும் இன்ஷா அல்லாஹ் பிஸ்மிலைக் கொண்டே ஆரம்பித்து முடியும் பட்சத்தில் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறிக்கொள்வோம். அல்லாஹு ஸுப்ஹானா வதஆலா நம் எல்லோருக்கும் ஈருலகிலும் இன்னருள் புரிவானாகஆமீன் யாரப்பால் ஆலமீன். வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
எழுதியவர், எழுதுவதற்கு உதவிபுரிந்தவர்கள்
முஹம்மது அஷீரப் ஸெய்னுல் ஹுஸைன்
ஸல்மன் பாரிஸ்
முஹம்மது முஹியத்தீன் அப்துல் கரீம் முஹம்மது முபாரக்
முஹம்மது பைஸர்
வெளியிடுவோர்கள்
முஹம்மது முஸ்தபா மெளலானா
முஹம்மது ரிஸான் மெளலவி
முஹம்மது நாகிப் மெளலவி
முஹம்மது ரியாழ் மெளலவி
COMMENTS