இமாம் புஹாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து ஒரு வருடத்தின் பின் ஸமர்கந்தில் மழை இல்லாமல் கடும் பஞ்சமும், வறட்சியும் நிலவியது. பல முறை மழைதேடித் தொழுதும், துஆக் கேட்டும் மழை பொழியவில்லை.
அப்பொழுது ஒரு நல்லடியார் ஸமர்கந்த் காழியாரிடம் "ஸமர்கந்த் மக்களை அழைத்துக் கொண்டு இமாம் புஹாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு சென்று அங்கிருந்து அல்லாஹ்விடத்தில் துஆக் கேழுங்கள். அல்லாஹ் உங்கள் துஆவை கபூல் செய்வான்" என்று ஆலோசனை மொழிந்தார்.
அதன் பின் ஸமர்கந்த் காழியார் மக்களை அழைத்துக் கொண்டு இமாம் புஹாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு சென்ற அங்கிருந்து மக்களோடு உருக்கமாக துஆச் செய்தார். எமது துஆவை கபூலாவதற்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுமாறு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுயிடத்திலும் வேண்டுதல் விடுத்தார்.
இவ்வாறு துஆக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. பிறகு மழை கொட்டோ கொட்டென கொட்டியது. எந்தளவு என்றால் மக்கள் ஸமர்கந்த் செல்வதற்கு சிரமப்படும் அளவுக்கு மழை கொட்டியது.
(ஆதாரம் : தபகாத்துஷ்ஷாபிஅத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 15)
COMMENTS