
- ஃபஜர் தொழுகைக்கு = தூங்கி விட்டேன்
- ளுஹர் தொழுகைக்கு = வேலை அதிகம்
- அஸர் தொழுகைக்கு = மறந்து விட்டேன்
- மஃரிப் தொழுகைக்கு = நேரம் இல்லை
- இஷா தொழுகைக்கு = சோர்ந்து விட்டேன்
இப்பட்டி காரணங்களைக் கூறி காலத்தை வீணடிப்பவனே!
உனக்கு உணவு உண்ண நேரம் உண்டு ஆனால் உண்ண உணவளித்த ரப்பை உணர நேரம் இல்லையா?
உனக்கு ஆடை அணிய நேரம் உண்டு ஆனால் ஆடை கொடுத்தவனை புகழ நேரம் இல்லையா?
கண்டதை எல்லாம் உனக்கு காண நேரம் உண்டு ஆனால் உனக்கு கண் கொடுத்தவனை காண நேரம் இல்லையா?
உனக்கு கண்டதை எல்லாம் பேச நேரம் உண்டு ஆனால் உனக்கு நாவளித்தவனுடன் பேச நேரம் இல்லையா?
ஓ மனித சற்று சிந்தித்துப் பார்...!
இன்று உன் படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்குச் செல்ல முடியாத நீ...
நாளை கப்ரிலிருந்து எழுந்து சுவனத்துக்கு செல்ல ஆசைப்படுகிறாயே...
ஓ மனிதா உன்னைச் சுற்றி எத்தனையோ விபத்துகளும் பெரும் ஆபத்துக்களும் நடைபெறுகின்றன. அதில் எத்தனையோ உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. என்ற போதிலும் அதிலிருந்து உன்னை உன் ரப்பு காப்பாற்றுகிறான் என்றால் உனது ரப்பு இன்னும் உனக்கு இரக்கம் காட்டுகிறான் என்பதை நீ அறிந்து கொள்.
அதுபோன்று உனக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய இந்த கால அவகாசம் குறித்தும் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படுவாய்.
அறிந்து கொள். உன் செயலை குறித்து கேள்வி கணக்குகள் கேட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
COMMENTS